ஐரோப்பா

மனித உரிமை மீறல் : 08 ரஷ்ய அதிகாரிகளுக்கு தடை விதிப்பு!

ரஷ்யாவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 08  நபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் இன்று தடை விதித்துள்ளது.

அலெக்ஸி கோரினோவ் (Aleksei Gorinov) மற்றும் பத்திரிகையாளர் மரியா பொனோமரென்கோ (Maria Ponomarenko) போன்ற அரசியல் கைதிகள் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தண்டனைக் காலனிகளின் தலைவர்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை அமுலுக்கு கொண்டுவர 27 ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் ஒருமித்த ஒப்புதல் தேவை.

இதேவேளை   கடந்த 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் முதன்முதலில் ரஷ்ய அதிகாரிகள் குழுவிற்கு எதிராக மனித உரிமைகள் தொடர்பான தடைகளை ஏற்றுக்கொண்டன.

இதற்கமைய தற்போதுவரை 72 நபர்கள் மீது மனித உரிமை தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்