செய்தி தென் அமெரிக்கா

அர்ஜென்டினாவில் இன்ஸ்டாகிராம் நேரலையில் நடந்த கொலையை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

  • September 28, 2025
  • 0 Comments

அர்ஜென்டினாவின் தலைநகரான பியூனஸ் அயர்ஸில், இரண்டு இளம் பெண்கள் மற்றும் ஒரு சிறுமி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலைகள் இன்ஸ்டாகிராம் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதை அடுத்து, அர்ஜென்டினா மக்கள் கொலைகளைக் கண்டித்து வீதிகளில் இறங்கினர். 20 வயதுடைய உறவினர்களான மொரேனா வெர்டி மற்றும் பிரெண்டா டெல் காஸ்டிலோ மற்றும் 15 வயது லாரா குட்டிரெஸ் ஆகியோரின் உடல்கள், காணாமல் போன ஐந்து நாட்களுக்குப் பிறகு, பியூனஸ் அயர்ஸின் தெற்கு […]

ஆப்பிரிக்கா செய்தி

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஜமைக்கா போட்டியாளர் 26 வயதில் மரணம் – தற்கொலை என சந்தேகம்

  • September 28, 2025
  • 0 Comments

முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் ஜமைக்கா போட்டியாளரும் 2023 இறுதிப் போட்டியாளருமான டைரா ஸ்பால்டிங் 26 வயதில் காலமானார். இந்த மரணம் சந்தேகத்திற்குரிய தற்கொலையாக விசாரிக்கப்படுவதாக ஜமைக்கா கான்ஸ்டாபுலரி படையின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. மிஸ் யுனிவர்ஸ் ஜமைக்கா அமைப்பு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு அஞ்சலியில் ஸ்பால்டிங்கின் மரணத்தை உறுதிப்படுத்தியது. அந்த அமைப்பு, “அழகான டைரா ஸ்பால்டிங்கின் இழப்பால் எங்கள் இதயங்கள் கனமாக உள்ளன, அவர் ஒரு பிரகாசமான ஆன்மா மற்றும் ஒரு அற்புதமான மனிதர்” ” […]

இந்தியா செய்தி

கரூர் பிரச்சார கூட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

  • September 28, 2025
  • 0 Comments

கரூர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 30 உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்த போதும் பின்னர் மீட்பு நடவடிக்கை மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்தது. இறுதியாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 31 […]

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸை தாக்கிய புவலாய் புயல் – 20 பேர் உயிரிழப்பு

  • September 28, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புவலாய் புயல் தாக்கி வருகின்றது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் நீரால் சூழப்பட்டு உள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், 23 ஆயிரம் குடும்பங்கள் புலம் பெயர்ந்துள்ளன. 1,400 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த கொடூர புவலாய் புயல் தாக்கத்தால் மத்திய பிலிப்பைன்சில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய புவலாய் புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்ந்துள்ளது. அதன் தாக்கம் கடுமையாக […]

செய்தி விளையாட்டு

Asia Cup Final – இந்தியாவிற்கு எதிராக 146 ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான்

  • September 28, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் மற்றும் பர்ஹான் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சிறப்பாக விளையாடிய பர்ஹான் அரைசதமடித்து அசத்தினார். அடுத்து வந்த வீரர்கள் இந்திய பந்து வீச்சிற்கு […]

ஆசியா செய்தி

$37 மில்லியன் லஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரண தண்டனை

  • September 28, 2025
  • 0 Comments

சீனாவின் முன்னாள் வேளாண்மை மற்றும் கிராமப்புற விவகார அமைச்சர் டாங் ரென்ஜியனுக்கு, ஜிலின் மாகாணத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 முதல் 2024 வரை பல்வேறு பதவிகளில் இருந்த டாங் ரென்ஜியன், 268 மில்லியன் யுவான் (37.6 மில்லியன் டாலர்) மதிப்புள்ள பணம் மற்றும் சொத்து என லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் நீதிமன்றம், அமைச்சின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றிய டாங்கின் வாழ்நாள் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது. […]

தமிழ்நாடு பொழுதுபோக்கு

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் : நீலாங்கரையில் அதிகரிக்கும் பதற்றம்…

  • September 28, 2025
  • 0 Comments

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய்யின் வீட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு […]

உலகம்

துருக்கியில் இரண்டு முறை பதிவான நிலநடுக்கங்கள் – வீதியில் திரண்ட மக்கள்!

  • September 28, 2025
  • 0 Comments

துருக்கியின் வடமேற்கு பகுதியில் இன்று (28.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் குடாஹ்யா மாகாணத்தில் உள்ள சிமாவ் நகரில் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 8 கிலோமீட்டர் (5 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அவசரகால நிறுவனம் AFAD தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பூங்காக்களில் ஒன்றுக்கூடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலடுக்கத்தால் ஏற்பட்ட […]

மத்திய கிழக்கு

காசா முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் ; 140 பயங்கரவாத இலக்குகளைத் தாக்கிய IDF

  • September 28, 2025
  • 0 Comments

காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் விமான படை இணைந்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டன. பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ஏவிய பல்வேறு பயங்கரவாதிகளும் அடையாளம் […]

இலங்கை

பொலன்னறுவையில் குரங்குகளிடையே பரவி வரும் தொற்று நோய் ; எச்சரிக்கை விடுத்துள்ள அதிகாரிகள்

  • September 28, 2025
  • 0 Comments

பொலன்னறுவை மற்றும் கிரித்தலேயில் உள்ள குரங்கு மற்றும் டோக் மக்காக் இனத்தவர்களிடையே ஒரு சந்தேகத்திற்குரிய தொற்று நோய் பரவி வருவதாகக் கூறப்படுகிறது, இது வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. புனித நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர், அங்கு குரங்குகள் மற்றும் டோக் மக்காக் இனத்தவர்கள் அதிக அளவில் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். எனவே, வனவிலங்கு அதிகாரிகள் பொதுமக்களை விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் […]

error: Content is protected !!