ஆசியா செய்தி முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் வழமைக்கு திரும்பிய தொலைத்தொடர்பு சேவைகள்

  • October 1, 2025
  • 0 Comments

தாலிபான் அதிகாரிகள் தொலைத்தொடர்புகளை நிறுத்திய 48 மணி நேரத்திற்குப் பிறகு, தலைநகர் காபூல் உட்பட ஆப்கானிஸ்தான் முழுவதும் பல மாகாணங்களில் தொலைத் தொடர்பு சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. நாட்டில் அரசமைத்துள்ள தலிபான்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த தடை ஏற்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த தொலைத்தொடர்பு முடக்கம் குறித்து தாலிபான் அரசாங்கம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. தாலிபான் அரசாங்கம் ஆட்சியை பிடித்ததில் இருந்து கடுமையான இஸ்லாமிய சட்டங்களை விதித்ததிலிருந்து, […]

இந்தியா செய்தி

ராஜஸ்தானில் மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்து குடித்த 2 குழந்தைகள் மரணம்

  • October 1, 2025
  • 0 Comments

ராஜஸ்தான் அரசாங்கத்திற்காக ஒரு மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து கடந்த இரண்டு வாரங்களில் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கும் குறைந்தது 10 பேர் நோய்வாய்ப்பட்டதற்கும் வழிவகுத்துள்ளது. மாநிலத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மருந்து நிறுவனமான கேசன் பார்மாவால் வழங்கப்பட்ட இந்த மருந்து குறித்து காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர். டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் ஹைட்ரோபுரோமைடு கொண்ட இந்த மருந்தின் ஆபத்து, சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் நிதிஷ் உயிரிழந்த பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு விஜயம் செய்த இங்கிலாந்து இளவரசி ஆன்

  • October 1, 2025
  • 0 Comments

மறைந்த ராணி எலிசபெத்தின் ஒரே மகள் பிரிட்டனின் இளவரசி ஆன் போரின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்த உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆன், கியேவுக்கு விஜயம் செய்தபோது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார். சந்திப்பின் போது உக்ரைனுக்கு பிரிட்டனின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2022ல் மோதல் தொடங்கியதில் இருந்து இறந்த […]

செய்தி விளையாட்டு

Womens WC – 326 ஓட்டங்கள் குவித்த பிரபல ஆஸ்திரேலிய அணி

  • October 1, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க வீரர்கள் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்தனர். அவர்களை தொடர்ந்து 6ம் இடித்தில் களமிறங்கிய ஆஷ்லீ கார்ட்னர் சதமடித்து அசத்தினார். அவர் 83 பந்துகளில் 13 பவுண்டரி, […]

இலங்கை

அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்துவது எமது கூட்டுப் பொறுப்பு – பிரதமர் ஹரிணி!

  • October 1, 2025
  • 0 Comments

அனைத்து குழந்தைகளின் பாதுகாப்பையும், பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், எந்தக் குழந்தையையும் விட்டுவிடாமல், அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் மன நலனைப் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார். அலரி மாளிகையில் சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று (01.10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாக வாழ்வதற்கு குழந்தைகளுக்கு உகந்த சூழலை […]

தமிழ்நாடு

கரூர் விவகாரம் – விஜய்யின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

  • October 1, 2025
  • 0 Comments

கரூரில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள குறிப்பில், மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  வேலூர், ராணிப்பேட்டை மற்றும் பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கான சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தை தொடர்ந்து கரூரில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக் […]

இலங்கை

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா,அவரது மனைவி மற்றும் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

  • October 1, 2025
  • 0 Comments

முன்னாள் பெட்ரோலிய வள மேம்பாட்டு அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் ஆறு பிரதிவாதிகள் மீது இன்று (01) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2014 டிசம்பரில் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி சட்டவிரோதமாக செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படும், அரசுக்குச் சொந்தமான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ரூ. 6.1 மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை, கொழும்பு […]

உலகம்

நைஜீரியாவில் நைஜர் நதியில் படகு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 26 பேர் பலி

  • October 1, 2025
  • 0 Comments

நைஜீரியாவின் வட-மத்திய பகுதியில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் குறைந்தது 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில் செவ்வாய்க்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. அண்டை நாடான எடோ ஸ்டேட்டில் உள்ள ஒரு சந்தைக்குச் சென்ற வணிகர்களே பெரும்பாலும் பயணிகளாக இருந்தனர் என்று கோகி மாநில ஆணையர் கிங்ஸ்லி ஃபான்வோ கூறினார். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. நீர்வழிப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இதுபோன்ற விபத்துகள் […]

பொழுதுபோக்கு

40 வயதில் மீண்டும் அம்மாவான பாலிவுட் நடிகை

  • October 1, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வந்த சோனம், கடந்த 2023ஆம் ஆண்டு ஷோக் மகிஜா இயக்கத்தில் உருவான பிலின்ட் படத்தில் முதன்மை பாத்திரத்தில் சோனம் கபூர் நடித்திருந்தார். தற்போது கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளதால், சிறிது இடைவேளை […]

வட அமெரிக்கா

நியூயார்க் நகரில் இடிந்து விழுந்த கட்டடம் – மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

  • October 1, 2025
  • 0 Comments

நியூயார்க்கின் பிராங்க்ஸ் பெருநகரத்தில் உயரமான கட்டடம் ஒன்று இன்று (01.10) பகுதியளவில் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிவாயு வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கட்டடம் இடிந்து விழுந்ததாக நியூயார்க் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன்காரணமாக யாரும் உயிரிழந்ததாகவோ, அல்லது காயமடைந்ததாகவோ குறிப்பிடப்படவில்லை. நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், நிலைமையை அறிந்திருப்பதாகவும், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பகுதியில் பயணிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!