ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இந்திய உணவக உரிமையாளர்

  • October 2, 2025
  • 0 Comments

இந்திய உணவக உரிமையாளர் ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய நிலையில் குறித்த இந்திய உணவக உரிமையாளர் நாடு நடத்தப்படவுள்ளார். பதின்ம வயதுடைய சிறுமி மற்றும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய நாட்டவர் குற்றவாளி என்று பல்லாரத் மாநில நீதிமன்ற நடுவர் மன்றம் கண்டறிந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த ஹார்ஷாமில் உள்ள ஒரு இந்திய உணவகத்தின் உரிமையாளரின் விசா ரத்து செய்யப்பட்டால் அவர் நாடு […]

செய்தி வட அமெரிக்கா

7 போர்களை நிறுத்திவிட்டேன் – நோபல் பரிசு வேண்டும் என புலம்பும் ட்ரம்ப்

  • October 2, 2025
  • 0 Comments

7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானமாகிவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் இடையே நடைபெற்ற 7 போர்களை நிறுத்தி விட்டதாக கூறிவரும் ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் போரையும் எப்படியும் நிறுத்திவிடுவேன் என தெரிவித்துள்ளார். “உலக நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்டியதற்கு தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என ட்ரம்ப் பிடிவாதமாக உள்ளார். ஆனாலும் நோபல் பரிசு உண்டா இல்லையா என்பது பற்றிய எவ்வித […]

செய்தி வட அமெரிக்கா

காசா போர் அமைதி திட்டம் – டிரம்பிற்கு குவியும் பாராட்டுக்கள்

  • October 2, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட காசா போர் அமைதி திட்டத்திற்கு பல தரப்பினரால் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த திட்டத்தினை வரவேற்றுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட 20 அம்ச அமைதி திட்டத்தை டிரம்ப் அறிவித்துள்ளார். இதை ஏற்பதாக இஸ்ரேல் கூறியுள்ள நிலையில், ஹமாஸ் மவுனம் காக்கிறது. இதையடுத்து அந்த அமைப்புக்கு மூன்று நாள் டிரம்ப் கெடு […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச பொலித்தீன் பைகள் வழங்க தடை விதிப்பு

  • October 1, 2025
  • 0 Comments

புதிய வர்த்தமானி அறிவிப்பின் கீழ் நவம்பர் 1ம் திகதி முதல் இலங்கையில் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவது தடை செய்யப்படும் என்று அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொலித்தீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கைகளைக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பிற சில்லறை விற்பனையாளர்கள் பைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தை […]

ஆப்பிரிக்கா செய்தி

எத்தியோப்பியாவில் தேவாலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழப்பு

  • October 1, 2025
  • 0 Comments

எத்தியோப்பியாவில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த ஒரு தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு எத்தியோப்பியாவின் அம்ஹாராவில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரேர்ட்டி மரியம் தேவாலயத்தில் புனித மேரியைக் கொண்டாடும் வருடாந்திர நிகழ்விற்காக வழிபாட்டாளர்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. “பாதிக்கப்பட்டவர்களில் சில குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவர், இதுவரை 25 பேர் இறந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்,” என்று உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவரான செயோம் அல்தாயே குறிப்பிட்டுள்ளார். […]

ஆசியா செய்தி

தாய்லாந்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது

  • October 1, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 23 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த ஜார்ஜ் வில்சன், பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 9.1 கிலோ கிரிஸ்டல் மெத் போதைபொருளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் விடுமுறையில் இருந்த வில்சன், சூட்கேஸுக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்து தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். குறித்த இளைஞர் மூலம் வெளிநாட்டினர் குழு ஒன்றிற்கு ஹோட்டலில் போதைப்பொருளை ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் […]

செய்தி விளையாட்டு

Womens WC – ஆஸ்திரேலிய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

  • October 1, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆஷ்லீ கார்ட்னர் 83 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்சருடன் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் யூத நிறுவனங்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய மூவர் கைது

  • October 1, 2025
  • 0 Comments

ஹமாஸ் சார்பாக ஜெர்மனியில் யூத இலக்குகளுக்கு எதிராக கடுமையான வன்முறைச் செயலைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேரை ஜெர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த மூன்று பேரும் ஹமாஸின் “வெளிநாட்டு செயல்பாட்டாளர்கள்” என்றும், ஜெர்மனியில் உள்ள இஸ்ரேலிய அல்லது யூத நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது ​​AK-47 துப்பாக்கி மற்றும் பல கைத்துப்பாக்கிகள் உட்பட பல்வேறு ஆயுதங்கள், அத்துடன் கணிசமான அளவு […]

ஆசியா செய்தி

நீண்ட தூர குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த பாகிஸ்தான்

  • October 1, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் ராணுவம் நீண்ட தூர குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது. ஃபத்தா-4 ஏவுகணை தரையிலிருந்து தரைக்கு ஏவும், 750 கிலோமீட்டர் (470 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது மற்றும் மேம்பட்ட விமானவியல் மற்றும் நவீன வழிசெலுத்தல் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயர் துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்குவதன் மூலம் எதிரிகளின் வான் பாதுகாப்பைத் தவிர்க்கும் திறன் கொண்ட ஆயுதம் இது என்று ராணுவம் குறிப்பிட்டுள்ளது. அண்டை […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பழங்கள் விற்க வந்த ஆந்திரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பொலிசார்

  • October 1, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 வயது பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தாயாரும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்கு பழங்கள் விற்க பயணம் செய்துள்ளனர். இரவு தாமதமாக சாலையோரத்தில் காத்திருந்த பிறகு, ரோந்து பணியில் இருந்த இரண்டு அதிகாரிகளான டி சுரேஷ்ராஜ் மற்றும் பி சுந்தர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் பெண்கள் வலுக்கட்டாயமாக ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு மகளை பாலியல் வன்கொடுமை […]

error: Content is protected !!