இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • October 2, 2025
  • 0 Comments

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்றதற்காக இலங்கை மற்றும் இந்திய நாட்டவர்களான இரண்டு விமான பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை விமானப் பயணி இரத்தினபுரியைச் சேர்ந்த 26 வயதுடைய தொழிலதிபர் எனவும், இந்திய விமானப் பயணி 23 வயதுடைய தொழிலதிபர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் கொண்டு […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 20 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிப்பு

  • October 2, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 20 மாடிக் குடியிருப்புக் கட்டடத்தின் ஓரமாய் இருந்த பெரிய புகைபோக்கி வெடித்துச் சிதறியுள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. புகைபோக்கி வெடித்துச் சிதறியுள்ளதால் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. குடியிருப்புக்கு அடியிலும் பக்கத்திலுள்ள விளையாட்டுத் திடலிலும் செங்கற்கள் குவிந்து கிடக்கின்றன. குடியிருப்பில் வசிக்கும் பெரும்பாலோர் வேலைக்கு அல்லது பாடசாலைக்கு சென்றுவிட்டதால் பேரிழப்பு தவிர்க்கப்பட்டது. குடியிருப்பின் உட்புறக் கட்டமைப்புக்குச் சேதம் இல்லை. எரிவாயுக் கசிவு அல்லது வேறு காரணங்களால் வெடிப்பு […]

இலங்கை

இலங்கையில் 8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி

  • October 2, 2025
  • 0 Comments

இலங்கையில் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், இந்த அளவு செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி […]

ஐரோப்பா

சுவிஸில் ஆபத்தாக மாறும் காய்ச்சல் தொற்று – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • October 2, 2025
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தின் அனைத்து இடங்களிலும் இப்போது இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருகின்றது. எனினும் பல வைரஸ்கள் மக்களிடையே பரவி வருகின்றன. பாரைன்ப்ளூயன்சா, ஆர்எஸ் வைரஸ்கள் மற்றும் ரைனோவைரஸ்கள் அனைத்தும் சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை தூண்டுகின்றன. கொரோனா வைரஸ் SARS-CoV-2 தொற்றுநோய் பரவலும் உள்ளது. தற்போது அதிக காய்ச்சலுடன் படுக்கையில் இருக்கும் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த முறை மற்ற ஆண்டுகளை விட கடுமையான காய்ச்சல் அலை அதிகம் […]

உலகம்

500 பில்லியன் டொலர் நிகர மதிப்பை எட்டிய உலகின் முதல் நபராக மாறிய எலோன் மஸ்க்

  • October 2, 2025
  • 0 Comments

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 500 பில்லியன் டொலர் நிகர மதிப்பை எட்டிய உலகின் முதல் நபராக மாறியுள்ளார். இந்த ஆண்டு மின்சார வாகன (EV) நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட மீட்சி மற்றும் அவரது பிற தொடக்க நிறுவனங்களின் மதிப்பில் ஏற்பட்ட விரைவான உயர்வு காரணமாக இந்த சாதனை படைத்த செல்வ உயர்வு ஏற்பட்டுள்ளது. போர்ப்ஸின் பில்லியனர்கள் குறியீட்டின்படி, மஸ்க்கின் நிகர மதிப்பு பிற்பகல் நிலவரப்படி 500.1 பில்லியன் டொலராக இருந்தது. மஸ்க்கின் செல்வம் […]

தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் பதற்றமே சந்தேகத்திற்கு காரணம் என கூறும் அண்ணாமலை

  • October 2, 2025
  • 0 Comments

செந்தில் பாலாஜியின் அதிகளவிலான பதற்றமே பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், இந்த பதற்றம் அவசியமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற […]

உலகம்

அமெரிக்காவின் முக்கியப் பெட்ரோல் நிறுவனங்களை குறிவைக்கும் ஏமனின் ஹெளதி கிளர்ச்சிக் குழு

  • October 2, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் முக்கியப் பெட்ரோல் நிறுவனங்களை குறிவைக்கப் போவதாக ஏமனின் ஹெளதி கிளர்ச்சிக் குழு மிரட்டல் விடுத்துள்ளது. மனின் ஹெளதி கிளர்ச்சிக் குழு மீது அமெரிக்கா இந்த ஆண்டு தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதற்குப் பதிலடியாக நிறுவனங்களைத் தாக்கப்போவதாக மனின் ஹெளதி கிளர்ச்சிக் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஹெளதி மனிதாபிமான ஒருங்கிணைப்பு நிலையம் 13 நிறுவனங்கள் உள்ளிட்ட சிலவற்றைப் பகைமைத் தரப்புகள் என்று அறிவித்தது. முன்னதாக செங்கடலிலும் ஏடன் வளைகுடாவிலும் அமெரிக்காவுடன் தொடர்புடைய கப்பல்களைத் தாக்கப்போவதில்லை என்று […]

இலங்கை

ஜனாதிபதி செயலகம் நோக்கி பறந்த ட்ரோன் – கொழும்பில் கைதான வெளிநாட்டவர்

  • October 2, 2025
  • 0 Comments

காலி முகத்திடலில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி அனுமதியின்றி ட்ரோனை பறக்கவிட்டதற்காக வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் டச்சு நாட்டவர் என தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த நபர் பயன்படுத்திய ட்ரோனையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். ட்ரோன் பறக்கவிடப்பட்டதனை முதலில் அவதானித்து விமானப்படை அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்து கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 56 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. […]

உலகம்

கட்டார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் – டிரம்ப் அறிவிப்பு

  • October 2, 2025
  • 0 Comments

பிற நாடுகளின் தாக்குதலில் இருந்து கட்டாரை பாதுகாக்கும் உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ளார் அதற்கமைய, கட்டார் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய தலைவர்களை குறிவைத்து கட்டாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, காசாவில் பாதுகாப்பு ஏற்படுத்துவது குறித்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது, தொலைபேசி வாயிலாக […]

விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்த வைபவ் சூரியவன்ஷி

  • October 2, 2025
  • 0 Comments

இந்தியாவின் வைபவ் சூரியவன்ஷி  19 வயதுக்குட்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 பந்துகளுக்குள் 2 சதங்களை அடித்த உலகின் முதல் துடுப்பாட்ட வீரரானார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய இளைஞர் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இது நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில், சூரியவன்ஷி 86 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார், அதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரது பேட்டிங், குறிப்பாக டெஸ்ட் மைதானத்தில் காட்டப்பட்ட ஆக்ரோஷம் காரணமாக, அவர் இந்திய கிரிக்கெட் […]

error: Content is protected !!