இந்தியா

இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பலி

  • October 6, 2025
  • 0 Comments

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை(05) சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் (trauma center) ஏற்பட்ட மின்சார கோளாறால் தீப்பற்றியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தின் போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 13 பேர் அருகிலிருந்த நோயாளிகள் தங்குமிடத்தில் இருந்தனர். தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது நோயாளிகள் தங்குமிடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் ஆட்டத்தை ஆரம்பித்தார் வாட்டர்மெலன் திவாகர்

  • October 6, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், வாட்டர்மெலன் திவாகர் உள்ளே சென்ற முதல் நாளே தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்திருக்கிறார். தன்னைத் தானே நடிப்பு அரக்கன் என சொல்லிக் கொள்ளும் திவாகர், பிக் பாஸ் வீட்டிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறேன் என கூறி, கர்ணன் படத்தில் வரும் சிவாஜி கணேசனை போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பார்வதியின் பாவடையில் திவாகர் மிதித்துவிட, அவர் பாவாடைய […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் சீசன் – 9 வீட்டில் ஒரு அகோரி… இனி என்ன நடக்கப்போகுதோ?

  • October 6, 2025
  • 0 Comments

நாட்டுப்புற கலைஞரான கலையரசன் பலருக்கும் நாட்டுப்புற கலைகளை கற்று கொடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அகோரியாக மாறினார். காசிக்கு சென்று அகோரிகளுடன் வாழ்ந்து. டீ, எலும்புகளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். வீட்டில் பூஜை செய்து சர்ச்சைகளை ஏற்படுத்தினார். யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து அதிகளவில் டிரெண்டானார். ஒரு கட்டத்தில் கலையரசனின் மனைவி பிரகாவிற்கும் கலையரசனுக்கும் இடையில் பெரிய பூகம்பம் வெடித்தது. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் புகார் அளித்தனர். இருவரும் பிரிந்து […]

மத்திய கிழக்கு

ஈரானியர்கள் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய இஸ்ரேல்

  • October 6, 2025
  • 0 Comments

ஈரானியர்கள் 6 பேருக்கு இஸ்ரேல் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும், இடையே கடந்த ஜுன் மாதம் 12 நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இந்த மோதலுக்குப் பின்னர், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்களது நாட்டைச் சேர்ந்த பலரை ஈரான் தொடர்ந்து கைது செய்து வருகிறது. கைது செய்யப்படும் […]

உலகம்

மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவது முக்கியம் – ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

  • October 6, 2025
  • 0 Comments

மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவது முக்கியம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியை அடைய ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், முதல் கட்டம் இந்த வாரம் முடிக்கப்பட வேண்டும். அது விரைவாக செய்யப்படாவிட்டால், யாரும் பார்க்க விரும்பாத விடயங்கள் பார்க்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலம் மிக முக்கியமானது, இல்லையெனில் யாரும் பார்க்க விரும்பாத இரத்தக்களரி நிறைய இருக்கும் என […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • October 6, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உடல், மன நலனுக்கு ஆதரவளிக்கும் புதிய அரசாங்க இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கைப் பராமரிப்புச் சேவைகளையும் மனநல ஆதரவையும் மெருகூட்ட இயக்கம் முனையும். இதன் மூலம் 20,000 ஊழியர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல்நலத்தையும் மனநலத்தையும் எவ்வாறு பேணுவது என்ற தகவல்களை வழங்க அடுத்த 2 ஆண்டுகளில் 20 சாலைக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு நிலையங்கள் ஆகியவற்றில் அவற்றை எதிர்பார்க்கலாம். 2021ஆம் ஆண்டிலிருந்து சுமார் […]

இலங்கை

காவல்துறையில் முன்னிலையாக முடியாதென அறிவித்த விமல் வீரவன்ச

  • October 6, 2025
  • 0 Comments

தங்காலை காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாக முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். மேலும், காவல்துறையினர் தனக்கு மற்றொரு திகதியை வழங்குவதற்கு இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அண்மையில் கைது செய்யப்பட்ட புவக்தண்டாவே சனா என்ற நபரின் அரசியல் தொடர்புகள் குறித்து, விமல் வீரவன்ச வெளிப்படுத்திய உண்மைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, […]

வாழ்வியல்

தினமும் முட்டை சாப்பிடலாமா? – ஆராய்ச்சியாளர்கள் விடுக்கும் எச்சரிக்கை

  • October 6, 2025
  • 0 Comments

ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கொழுப்பு அமிலங்கள், குறிப்பாக LDL (கெட்ட கொழுப்பு) அளவை அதிகரிக்கக்கூடும் என்று புதிய மெட்டா பகுப்பாய்வு ஆராய்ச்சி எச்சரிக்கிறது. 2020ஆம் ஆண்டு மான்-யுன் லி தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், ஒரு நாளைக்கு முட்டை சாப்பிட்டவர்களில் இரத்த LDL அளவு சுமார் 8 mg/dL உயர்ந்தது என தெரியவந்தது. அதேசமயம், HDL (நல்ல கொழுப்பு) […]

இலங்கை செய்தி

இலங்கையை நோக்கி படையெடுக்கும் ஐரோப்பிய நாட்டவர்கள்

  • October 6, 2025
  • 0 Comments

செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 158,971 என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 30.24 சதவீதம் அதிகமாகும் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. செப்டம்பரில், இந்தியாவில் இருந்து 49,697 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இது சதவீதமாக 31.3 சதவீதம் ஆகும். கடந்த செப்டம்பரில் பிரித்தானியாவிலிருந்து 10,527 சுற்றுலாப் பயணிகள், ஜெர்மனியிலிருந்து 9,344 […]

ஐரோப்பா

சுவிஸில் 766 கிலோ பூசணிக்காய் – சாதனை படைத்த விவசாயி

  • October 6, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பூசணிக்காயை வளர்த்து, ஒரு விவசாயி சாதனையை பதிவு செய்துள்ளார். சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி ப்ளோரியன் இஸ்லர், 766 கிலோ எடையுள்ள ஒரு பூசணிக்காயை வளர்த்துள்ளார். அவர் ஸ்குவாஷ் வகையின் கீழ் நடைபெற்ற சுவிஸ் பூசணிக்காய் எடை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்மை இடத்தைப் பெற்றார். இந்தப் போட்டி சனிக்கிழமை, சென் காலனில் உள்ள ஜோனாவில் நடைபெற்றது. இது இவருக்கான தொடர்ச்சியான வெற்றியாகும். கடந்த ஆண்டு, இஸ்லர் 727.5 கிலோ எடையுள்ள பூசணிக்காயுடன் சாதனை படைத்திருந்தார். […]

error: Content is protected !!