செய்தி விளையாட்டு

Womens WC – பாகிஸ்தானுக்கு 248 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி

  • October 5, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா விளையாடி வருகிறது. நாணய சுழற்சியில் தோல்வியடைந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பிரதிகா ராவல் 31 ஓட்டங்களும், ஸ்மிருதி மந்தனா 23 ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ஓட்டங்களும், […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பலூன் அக்கா… யார் இந்த அரோரா சின்க்ளேர்

  • October 5, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்று ஆரம்பமாகியது. இந்த 9 ஆவது சீசனில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய போட்டியாளராக இன்ஸ்டாகிராம் பிரபலம் அரோரா சின்க்ளேர் பங்கேற்றுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த அரோரா சேலத்தில் பாடசாலை படிப்பை முடித்தார். தாவரவியலில் பட்டப்பட்டிப்பை முடித்தப் பின் சென்னைக்கு வேலைக்காக வந்த அரோரா அந்த வேலையில் வந்த சம்பளம் பற்றாத காரணத்தினால் மாடலிங்-க்குள் நுழைந்தார். பாரம்பரிய உடையில் மாடலிங் செய்வதற்கு ஏற்ற உடலமைப்பு இல்லாததால் கிளாமரை நோக்கி நகர்ந்தார். தனது 21 வயதில் […]

இலங்கை

இலங்கையின் பல இடங்களில் மின் துண்டிப்பு!

  • October 5, 2025
  • 0 Comments

இலங்கை மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் மற்றும் நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 30,000இற்கும் மேற்பட்ட மின்துண்டிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மின் தடைகளை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொழிற்சங்க நடவடிக்கை 31 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க கூறியுள்ளார். அரசாங்கம் சரியான முறையில் பதிலளித்தால், உடனடியாக மின் தடைகளை மீட்டெடுக்க முடியும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் குடிபோதையில் வந்த கணவனின் வெறிச்செயல்! பெண் படுகொலை!

  • October 5, 2025
  • 0 Comments

இலங்கை – வெல்லம்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் இன்று தீவைத்து எரியூட்டப்பட்டுள்ளார். இது தொடர்பில் பெண்ணின் கணவர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 29 வயதுடைய ஒரு குழந்தையின் தாயார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவர் கூரையின் வழியே வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் பெட்ரோலை அப்பெண்ணின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்ற கணவர், குழந்தையை அருகில் இருந்த […]

வட அமெரிக்கா

கலிஃபோர்னியாவில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

  • October 5, 2025
  • 0 Comments

கலிஃபோர்னியாவின் Big Bear Cityஇற்கு அருகாமையில் இன்று 3.4 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதிகாலை 2:51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் குறித்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கடந்த வாரத்தில் இப்பகுதியில் 2.5 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும்போது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளையும் அந்நாட்டு […]

பொழுதுபோக்கு

பிரம்மாண்டமாக ஆரபமாகியது ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 9’ – முதல் போட்டியாளராக திவாகர்

  • October 5, 2025
  • 0 Comments

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 9’ நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாகத் தொடங்கியது. இந்த சீசனில், முதல் போட்டியாளராக உள்ளே வந்தவர் வைத்தியர் திவாகர் ஆவார். திவாகர் மேடைக்கு வந்ததும் பார்வையாளர்கள் சிலர் உற்சாகத்தில் “நடிப்பு அரக்கன்” என்று திவாகரை அழைத்தனர். இந்த வார்த்தையைக் கேட்டதும், தொகுப்பாளர் விஜய் சேதுபதி உடனடியாகக் கோபமாக ரியாக்ட் செய்தார். அந்தப் பட்டத்தை இங்கே சொல்ல வேண்டாம் திவாகர் தனது பல நேர்காணல்களிலும் தன்னை ‘நடிப்பு அரக்கன்’ என்று தானே […]

செய்தி

உக்ரைன் முழுவதும் ரஷ்ய வான்வழித் தாக்குதலில் ஐவர் பலி, எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதம்

  • October 5, 2025
  • 0 Comments

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தொடர் தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் உக்ரைனின் பல பிராந்தியங்களில் எரிசக்தி வசதிகள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, சபோரிஜியாவில், ரஷ்யாவின் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்ததாக உக்ரைனின் ஆளுநர் இவான் ஃபெடோரோவ் தெரிவித்தார். சபோரிஜியா மற்றும் வடக்கு செர்னிஹிவ் பிராந்தியத்தில் எரிசக்தி வசதிகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் எரிசக்தி […]

இலங்கை

இலங்கையில் 14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த இளைஞருக்கு சிறை தண்டனை!

  • October 5, 2025
  • 0 Comments

மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.பீ.அன்பார்  உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 18 வயது இளைஞர் தனது சொந்த குடும்ப அங்கத்தவர்களில் ஒருவரான 14 வயதுடைய பாடசாலை மாணவி […]

ஆசியா

நேபாளத்தில் பெய்த கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42ஆக உயர்வு

  • October 5, 2025
  • 0 Comments

நேபாளத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் நாட்டின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் பேரிடர் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுவரை 42 பேர் இறந்துள்ளனர், மேலும் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக நேபாளத்தின் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத் கூறினார். கிழக்கு மாவட்டமான இலாமில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொழுதுபோக்கு

சேலையில் மயக்கும் மீனாட்சி செளத்ரி

  • October 5, 2025
  • 0 Comments

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை மீனாட்சி செளத்ரி. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் சாரியில் எடுத்த அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகை எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள்? என்று ரசித்து வருகின்றனர்.           

error: Content is protected !!