இலங்கை

மாத்தறை திக்வெல்லவில் பாடசாலை நீச்சல் குளத்தில் மூழ்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

  • October 6, 2025
  • 0 Comments

திக்வெல்லவில் உள்ள தனது பாடசாலையில் நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவன் திக்வெல்ல, விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவர் தனது வகுப்பு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து தற்செயலாக நீச்சல் குளத்தில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பந்தை எடுக்க தண்ணீரில் இறங்கிய போது அவரால் மேலே வர […]

மத்திய கிழக்கு

ட்ரம்பின் காசா திட்டம் குறித்து இஸ்ரேல் , ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை

  • October 6, 2025
  • 0 Comments

ட்ரம்பின் அமைதி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இஸ்ரேல், ஹமாஸ் உயரதிகாரிகள் எகிப்தில் ஒன்றுகூடியுள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை பரிந்துரைத்தார். கடந்த 30ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்தார். இந்தநிலையில் ஹமாஸ் 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக விவாதிக்க மத்தியஸ்த […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பதவி விலகினார்!

  • October 6, 2025
  • 0 Comments

பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரான்சுவா பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு பதவியேற்ற அவர் 26 நாட்களுக்குள் மேற்படி முடிவெடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்  அவரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது!

  • October 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் மல்லாகத் பகுதியைச் சேர்ந்தவராவார். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக நிலப் பத்திரம் எழுதியதற்காக அந்தப் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணைகளுக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியா

இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பலி

  • October 6, 2025
  • 0 Comments

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை(05) சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் (trauma center) ஏற்பட்ட மின்சார கோளாறால் தீப்பற்றியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தின் போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 13 பேர் அருகிலிருந்த நோயாளிகள் தங்குமிடத்தில் இருந்தனர். தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது நோயாளிகள் தங்குமிடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டில் ஆட்டத்தை ஆரம்பித்தார் வாட்டர்மெலன் திவாகர்

  • October 6, 2025
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், வாட்டர்மெலன் திவாகர் உள்ளே சென்ற முதல் நாளே தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்திருக்கிறார். தன்னைத் தானே நடிப்பு அரக்கன் என சொல்லிக் கொள்ளும் திவாகர், பிக் பாஸ் வீட்டிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறேன் என கூறி, கர்ணன் படத்தில் வரும் சிவாஜி கணேசனை போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த பார்வதியின் பாவடையில் திவாகர் மிதித்துவிட, அவர் பாவாடைய […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் சீசன் – 9 வீட்டில் ஒரு அகோரி… இனி என்ன நடக்கப்போகுதோ?

  • October 6, 2025
  • 0 Comments

நாட்டுப்புற கலைஞரான கலையரசன் பலருக்கும் நாட்டுப்புற கலைகளை கற்று கொடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அகோரியாக மாறினார். காசிக்கு சென்று அகோரிகளுடன் வாழ்ந்து. டீ, எலும்புகளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். வீட்டில் பூஜை செய்து சர்ச்சைகளை ஏற்படுத்தினார். யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து அதிகளவில் டிரெண்டானார். ஒரு கட்டத்தில் கலையரசனின் மனைவி பிரகாவிற்கும் கலையரசனுக்கும் இடையில் பெரிய பூகம்பம் வெடித்தது. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் புகார் அளித்தனர். இருவரும் பிரிந்து […]

மத்திய கிழக்கு

ஈரானியர்கள் 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய இஸ்ரேல்

  • October 6, 2025
  • 0 Comments

ஈரானியர்கள் 6 பேருக்கு இஸ்ரேல் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும், இடையே கடந்த ஜுன் மாதம் 12 நாட்கள் நீடித்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இந்த மோதலுக்குப் பின்னர், இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்களது நாட்டைச் சேர்ந்த பலரை ஈரான் தொடர்ந்து கைது செய்து வருகிறது. கைது செய்யப்படும் […]

உலகம்

மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவது முக்கியம் – ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

  • October 6, 2025
  • 0 Comments

மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவது முக்கியம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமைதியை அடைய ஹமாஸுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், முதல் கட்டம் இந்த வாரம் முடிக்கப்பட வேண்டும். அது விரைவாக செய்யப்படாவிட்டால், யாரும் பார்க்க விரும்பாத விடயங்கள் பார்க்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலம் மிக முக்கியமானது, இல்லையெனில் யாரும் பார்க்க விரும்பாத இரத்தக்களரி நிறைய இருக்கும் என […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • October 6, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உடல், மன நலனுக்கு ஆதரவளிக்கும் புதிய அரசாங்க இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கைப் பராமரிப்புச் சேவைகளையும் மனநல ஆதரவையும் மெருகூட்ட இயக்கம் முனையும். இதன் மூலம் 20,000 ஊழியர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல்நலத்தையும் மனநலத்தையும் எவ்வாறு பேணுவது என்ற தகவல்களை வழங்க அடுத்த 2 ஆண்டுகளில் 20 சாலைக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு நிலையங்கள் ஆகியவற்றில் அவற்றை எதிர்பார்க்கலாம். 2021ஆம் ஆண்டிலிருந்து சுமார் […]

error: Content is protected !!