ஆப்பிரிக்கா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி முக்கிய செய்திகள்

மடகாஸ்கரின் புதிய பிரதமராக இராணுவ ஜெனரல் ரூபின் போர்டுனட் சஃபிசம்போ (Ruphin Fortunat Zafisambo) நியமனம்

  • October 6, 2025
  • 0 Comments

மின்வெட்டு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தூண்டப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் மடகாஸ்கரின் புதிய பிரதமராக இராணுவ ஜெனரல் ரூபின் ஃபோர்டுனட் சஃபிசம்போ (Ruphin Fortunat Zafisambo) நியமிக்கப்பட்டுள்ளார். போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தை கலைப்பதாக அறிவித்து ஒரே வாரத்தில் புதிய பிரதமரை நியமித்துள்ளார். தற்போது மூன்று வாரங்களாக தொடரும் இந்த போராட்டத்தில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

செய்தி வட அமெரிக்கா

சிகாகோவில் நடந்த சாலை விபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் மரணம்

  • October 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா பகுதியைச் சேர்ந்த 25 வயது ஷெராஸ் மெஹ்தாப் முகமது உயிரிழந்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த முகமது, இல்லினாய்ஸின் சிகாகோவின் புறநகர்ப் பகுதியான எவன்ஸ்டனில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு இந்த துயர சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 48 மணி நேரத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது துயர […]

ஆசியா செய்தி

தலைமுடிக்கு நிறம் பூசிய சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • October 6, 2025
  • 0 Comments

20 வயது சீனப் பெண் ஒருவர் தனது விருப்பமான பாப் பாடகரின் தோற்றத்தை பின்பற்றி கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் தனது தலைமுடியின் நிறத்தை மாற்றியதால் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஹுவா, கால்களில் சிவப்பு புள்ளிகள், மூட்டு வலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை செய்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பரிசோதனையின் போது அவரது சிறுநீரகங்களில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜெங்ஜோ மருத்துவமனையின் பெண் மருத்துவரான தாவோ […]

இந்தியா செய்தி

லக்னோவில் இணைய விளையாட்டு மோகத்தால் தாயை கொன்ற 20 வயது இளைஞன்

  • October 6, 2025
  • 0 Comments

லக்னோவில் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையான 20 வயது இளைஞன் ஒருவர், விளையாட்டில் ஏற்பட்ட கடனை அடைக்க வீட்டில் நகைகளைத் திருடிய போது பிடிபட்டதால் தனது 45 வயது தாயை கொலை செய்துள்ளார். நிகில் யாதவ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, தானும் தனது தாயாரும் தங்கள் வீட்டில் நடந்த கொள்ளையின் போது தாக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது குடும்பத்துடன் கல்லி பகுதியில் வசித்து வந்த நிகில், இணைய விளையாட்டில் அடிமையாகி […]

ஆசியா செய்தி

இந்தோனேசியா பாடசாலை கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்வு

  • October 6, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சிடோர்ஜோ நகரில் உள்ள அல்-கோசினி இஸ்லாமிய பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். “இன்று மீட்புப் பணிகளை முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் உடல்களை குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை செயல்பாட்டு இயக்குநர் யுதி பிரமந்தியோ குறிபிட்டுள்ளார். குறித்த சம்பவம் […]

செய்தி விளையாட்டு

Womens WC – 231 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து அணி

  • October 6, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து தொடக்க வீராங்கனைகளாக சுசி, ஜார்ஜியா களமிறங்கினர். போட்டியின் முதல் பந்திலேயே சுசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜார்ஜியா 31 ஓட்டங்களும் அமிலியா 23 […]

பொழுதுபோக்கு

விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

  • October 6, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் தேவரகொண்டா பயணித்த கார் தெலங்கானாவில் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழிழும் அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள். இவருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் இடையில் காதல் உறவு இருப்பதாகவும், அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல் உலா வருகின்றன. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் உந்தவல்லி என்ற பகுதியில் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஆடுகளை ஏற்றி வந்த ட்ரக் ஒன்று, […]

ஐரோப்பா

ரஷ்ய எண்ணெய் முனையம், வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

  • October 6, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உள்ள ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. உக்ரைன் ட்ரோன் மூலம் கிரிமியாவில் உள்ள எண்ணெய் முனையத்தைத் தாக்கியதாகவும், கிரிமியா உள்பட 14 மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. […]

கருத்து & பகுப்பாய்வு

AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் சிகிச்சை முறை – உரிமையை கைப்பற்றிய அஸ்ட்ராஜெனகா!

  • October 6, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனமான அல்ஜென் (Algen) உடன் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுமார் $555 மில்லியன் பெறுமதியான இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படும் மரபணு சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், அதனை  வணிகமயமாக்குவதற்குமான பிரத்தியேக உரிமத்தை  அஸ்ட்ராஜெனெகாவிற்கு (AstraZeneca) வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளை இலக்காகக் கொண்ட சிகிச்சைகளை உருவாக்குவதற்கான பிரத்தியேக […]

இலங்கை

இலங்கை தொடர்பில் ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

  • October 6, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கை தொடர்பாக இன்று 6ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கடந்த மாத ஆரம்பத்தில் இந்த பிரேரணையின் முதலாவது வரைவு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் திருத்தப்பட்ட இறுதி வரைவு இன்றைய தினம் 06ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு இன்றைய […]

error: Content is protected !!