இலங்கை செய்தி

இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்!

  • October 21, 2025
  • 0 Comments

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையின் அறிவிப்பின்படி நேற்று மட்டும் 06 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றிய முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல் உறவுகள் காரணமாகவும், மற்ற சம்பவம் பலவந்தமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்த அனைத்து சம்பவங்களிலும் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சிறுமிகள் 12, 14, 15 மற்றும் 17 வயதுடையவர்களாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போதிலும் இரண்டு […]

உலகம்

கிழக்கு எத்தியோப்பியாவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் பலி

  • October 21, 2025
  • 0 Comments

கிழக்கு எத்தியோப்பியாவில் நடந்த ரயில் விபத்தில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாகவும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் இன்று(21) செய்தி வெளியிட்டுள்ளன. டிஜிபூட்டிக்கு(Djibouti) அருகிலுள்ள எல்லை நகரமான டெவேலில்(Dewele) இருந்து டயர் டாவா(Dire Dawa) நகரத்திற்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2:00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்ததாக டயர் டிவி தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும், 29 பேர் பலத்த […]

ஐரோப்பா

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarkozy) சிறையில் அடைப்பு

  • October 21, 2025
  • 0 Comments

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்​கோலஸ் சர்கோசி(Nicolas Sarkozy), தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பிரான்​ஸில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்​தலில் நிக்​கோலஸ் சர்​கோசி வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அப்​போது தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்​காக லிபி​யா​வின் அப்​போதைய ஜனாதிபதி மாமர் கடாஃபியிடம் இருந்து சட்​ட​விரோத​மாக நிதி பெற்​ற​தாக​வும், இதற்கு பிர​திபல​னாக, தனித்​து​விடப்​பட்ட லிபியா​வுக்கு சர்​வ​தேச அரங்​கில் பிரான்ஸ் ஆதர​வாக செயல்​படும் என நிக்​கோலஸ் சர்​கோசி உறு​தி​ அளித்ததாகவும் தெரியவந்தது. இது தொடர்​பான வழக்​கில் ஜனாதிபதி தேர்​தல் […]

இலங்கை

2025 ஆம் ஆண்டில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு – 22 பேர் உயிரிழப்பு

  • October 21, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர், கண்டறியப்பட்ட நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதிக ஆபத்துள்ள 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி […]

உலகம்

H-1B விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த காத்திருப்போருக்கு செக் வைத்த ட்ரம்ப் நிர்வாகம்!

  • October 21, 2025
  • 0 Comments

H-1B விசாவில் வெளிநாட்டு நபர் ஒருவரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 01 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும் என்ற தகவல் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இந்த புதிய விதி புதிதாக விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொருந்தும் என்றும் ஏற்கனவே H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் ட்ரம்ப் நிர்வாகம்  அறிவித்துள்ளது. எப்-1 மாணவர் விசா அல்லது எல்-1 தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்களது விசாவை H-1B விசாவிற்கு மாற்ற முற்படும்போது […]

பொழுதுபோக்கு

மீண்டும் ரீ-ரிலீஸாகும் ‘பிரண்ட்ஸ்’

  • October 21, 2025
  • 0 Comments

தமிழ் திரையுலகில் பழைய படங்களை மீண்டும் தூசுதட்டி வெளியிடும் ரீ-ரிலீஸ் மோகம் எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போ தளபதி விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்து மெகா ஹிட்டான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம், மீண்டும் நவம்பர் 21 ஆம் திகதி திரைக்கு வர இருக்கிறது. விஜய், சூர்யா, வடிவேலு, தேவயாணி, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்த படம் ‘பிரண்ட்ஸ்’. மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது. அண்மையில் […]

உலகம்

அமெரிக்க அணுசக்தி நிறுவனம் பணிநிறுத்தம் காரணமாக 1,400 ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம்

  • October 21, 2025
  • 0 Comments

தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 1,400 ஊழியர்கள் திங்கட்கிழமையிலிருந்து (20) வேலைக்கு வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடத்தப்பட்ட மற்றுமொரு வாக்கெடுப்புத் தோல்வியடைந்த நிலையில் அண்மை அறிவிப்பு வந்துள்ளது. அரசாங்க முடக்கம் தொடங்கி மூன்று வாரத்திற்கும் மேலாகிவிட்டது. “ஜனநாயகக் கட்சியினரின் முடக்கத்தால் தேசிய அணுப் பாதுகாப்பு நிர்வாகத்தின் கிட்டத்தட்ட 1,400 ஊழியர்கள் தற்காலிகமாக வேலையிலிருந்து அகற்றப்படுகின்றனர். மக்களையும் சொத்துகளையும் பாதுகாக்க நிர்வாகத்தின் ஏறக்குறைய 400 மத்திய ஊழியர்கள் தொடர்ந்து வேலை […]

இலங்கை

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்!

  • October 21, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீறிவிட்டது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (21) குற்றஞ்சாட்டினார். தேர்தல் சம்பந்தமாக ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஒருவருட காலப்பகுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி வழங்கி இருந்தது. எனினும், ஒரு வருடம் […]

இலங்கை

மீண்டும் பலமடைந்து வரும் மொட்டுக் கட்சி!

  • October 21, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிச்சென்ற ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் கட்சி வலுவடைந்துவருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியானது 3 சதவீதமாகவே இருந்தது. எனினும், அது 69 லட்சமாக அதிகரித்தது. அதாவது […]

இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் வரவு – செலவுத் திட்டத்தை ஆராய சஜித் அணி விசேட குழு அமைப்பு

  • October 21, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. அதற்கமைய, முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவு திட்டத்தை ஆராய்ந்து, தர்க்க ரீதியிலான கருத்துகளை முன்வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. இதற்காக கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் சில பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை அக்கட்சி நியமிக்கவுள்ளது. வெறுமனே விமர்சனங்களை முன்வைக்காமல், புள்ளிவிவரம் மற்றும் விஞ்ஞானப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கும் நோக்கிலேயே இந்தக் குழு […]

error: Content is protected !!