இலங்கை

பெக்கோ சமனின் மனைவிக்கு மீண்டும் விளக்கமறியல்

  • October 23, 2025
  • 0 Comments

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த […]

பொழுதுபோக்கு

உயிருக்கு போராடும் ரீனா… பரபரப்பான இறுதி கட்டத்தில் ஹார்ட் பீட் சீசன் 2

  • October 23, 2025
  • 0 Comments

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்று ‘ஹார்ட் பீட்’ சீசன் 2. இந்த தொடரும் விரைவில் முடிவுக்கு வர இருக்கின்றது. இந்த நிலையில், ரீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தீபா பாபுவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘ஹார்ட் பீட்’ சீசன் 2 மருத்துவ உலகம் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்குள் நடக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. இந்த வார எபிசோட்களில், ரீனாவின் […]

ஐரோப்பா

மின் வெட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • October 23, 2025
  • 0 Comments

பெஞ்சமின் எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் பிரித்தானியாவின் பல பகுதிகளை இன்று  தாக்கும் நிலையில், நாடு முழுவதம் கடும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்படும் எனவும், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பயண இடையூறுகளையும் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புயலானது  ஆங்கிலக் கால்வாயிலிருந்து வட கடல் நோக்கி நகரும்போது, பெரிய அலைகள் உருவாகும் எனவும் இதனால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில […]

இலங்கை

‘ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்’ – பொலிஸ் அமைச்சரை மிரட்டிய எம்.பி.!

  • October 23, 2025
  • 0 Comments

” என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் காவல் துறைக்கு பொறுப்பனா அமைச்சரே….” இவ்வாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க(Chamara Sampath Dassanayake) தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் தஸநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். தனது உரையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சாமர எம்.பி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். ” அமைச்சரே, எம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. முடிந்தால் எம்மை கொல்லுங்கள். ஆவியாக […]

உலகம்

அமெரிக்காவில் மீண்டும் வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல்

  • October 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் மீண்டும் பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பல பண்ணைகளில் ஏற்பட்ட கிருமிப்பரவலால் 7 மில்லியனுக்கும் அதிகமான பண்ணைப் பறவைகள் உயிரிழந்தன. உயிரிழந்த பறவைகளில் 1.3 மில்லியன் வான்கோழிகள் ஆகும். அடுத்த மாதம் இறுதியில் தேங்ஸ்கிவ்விங் (Thanksgiving) வருவதால் அமெரிக்காவில் வான்கோழிகளுக்குப் பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடஹோ, நெப்ராஸ்கா, டெக்ஸஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மாட்டுப் பண்ணைகளிலும் கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகக் கோடைக்காலம் முடிந்த […]

உலகம்

பெருவில் (Peru) அவசரகாலநிலை பிரகடனம் : தலைநகரில் ரோந்து செல்லும் இராணுவம்!

  • October 23, 2025
  • 0 Comments

பெருவில் (Peru) ஜனாதிபதி ஜோஸ் ஜெரி (José Jerí) பிறப்பதித்த அவசரகாலநிலை உத்தரவை தொடர்ந்து தலைநகரில் இராணுவத்தினர் ரோந்து சென்றதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஜோஸ் ஜெரியின் (José Jerí) உத்தரவு அரசியலமைப்பு உரிமைகளை இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்றுக்கூடுதல், எதிர்ப்பு தெரிவிக்கும் சுதந்திரம், உள்ளிட்டவற்றை பாதித்துள்ளது.  மோட்டார் சைக்கிளில் பயணிப்பது, கைதிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துவது உள்பட பல விடயங்களை பாதித்துள்ளது. மேலும் சிறை அறைகளுக்கான மின் வெட்டுக்களை துண்டிப்பது உள்ளிட்ட பல […]

இலங்கை

பாதாள குழுக்களுக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் உறுதி!!

  • October 23, 2025
  • 0 Comments

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்த  விடயத்தில் பின்வாங்கப்போவதில்லை”என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும். ஒழுக்க விழுமியமுடைய சமூகமொன்று உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு நாம் உறுதியளித்துள்ளோம். அதற்கமைய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. அரசியல் […]

இலங்கை

அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம்!

  • October 23, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கல்வி சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்ற துணைக்குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் போது பிரதமர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால குழந்தைப் பருவ பாடத்திட்ட கட்டமைப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 19,000 பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நவம்பர் […]

உலகம் முக்கிய செய்திகள்

நுரையீரல், மூளைக்கு ஆபத்தாக மாறும் மைக்ரோபிளாஸ்டிக் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  • October 23, 2025
  • 0 Comments

மைக்ரோபிளாஸ்டிக் (Microplastic) எனப்படும் மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உடலில் ஒக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative Stress) ஏற்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. ஆய்வகச் சோதனைகள் மற்றும் எலிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அழுத்தம் வயதாதல் மற்றும் உறுப்புச் சேதத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு உயிரியல் நிகழ்வாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மைக்ரோபிளாஸ்டிக் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டி, கவலைக்குரிய வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும் என ரோயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனம் (Royal Melbourne Institute […]

பொழுதுபோக்கு

சன் டிவியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவாங்கி…

  • October 23, 2025
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’யின் வெற்றியைக் கண்டு சன் டிவி ஆரம்பித்த நிகழ்ச்சிதான் ‘டாப் குக் டூப் குக்’. ‘சிவாங்கி’ என்றால் இசை நிகழ்ச்சியில் கால் பதித்து, சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இன்று அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர். அனைவரின் தனித்துவமான பாடும் திறமை மற்றும் நகைச்சுவையான தன்னிச்சையான தன்மை அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது. அந்த வகையில் சிவாங்கிக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது என்றால் அது விஜய் […]

error: Content is protected !!