ஐரோப்பா

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை – புட்டினுக்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் முயற்சி

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை இலக்கு வைக்கும் வகையில் அமெரிக்கா புதிய தடைகளை அறிமுகம் செய்துள்ளது. உக்ரேனுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முயற்சி செய்து வருகின்றார். அதற்கமைய, தடைகளை விதித்து ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) நேட்டோ செயலாளர் நாயகம் மார்க் ருத்தேவை (Mark Rutte) சந்தித்த பின் […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் முதன்முறையாக நுளம்புகள் கண்டுபிடிப்பு – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

  • October 23, 2025
  • 0 Comments

ஐஸ்லாந்தில் முதன்முறையாக நுளம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி, அந்நாட்டு விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நுளம்புகள் இல்லாத இரு முக்கிய நாடுகளில் ஒன்றாக இதுவரை ஐஸ்லாந்து அறியப்பட்டிருந்தது. மற்றையது அன்டார்ட்டிக்கா ஆகும். பல வாரங்களாக நடத்திய விரிவான ஆய்வின் முடிவில் இந்த மூன்று நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பூச்சிகளில் தீவிர அக்கறை கொண்ட ஆர்வலரான யோன் ஜல்ரசன் (Gísli Jón Jónasson) தெரிவித்துள்ளார் என BBC செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக சுற்றுச்சூழல் உஷ்ணம் ஐஸ்லாந்தில் […]

செய்தி

காஸா மனிதாபிமான உதவி – இஸ்ரேலுக்கு ஐ.நா. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

  • October 23, 2025
  • 0 Comments

காஸாவில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை இலகுபடுத்த வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உண்டு என ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவிட்டுள்ளது. பலஸ்தீனர்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளையும் இஸ்ரேல் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது. மத்திய கிழக்கு நிலவரம் குறித்து ஆலோசனை ரீதியான கருத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம், காஸா பகுதிக்குள் உணவு, நீர், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அடிப்படை உதவிகள் தடையில்லாமல் செல்வதற்கு இஸ்ரேல் […]

இலங்கை

தெற்கு அரசியலில் திருப்பம் – நேரடி சந்திப்புக்கு தயாராகும் ரணில், சஜித்

  • October 23, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேரடி சந்திப்பை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் உள்ளவர்கள் பேச்சுகளில் ஈடுபட்டுவருகின்றன. எனவே, பொதுவேலைத்திட்டத்தின்கீழ் இணைந்து பயணிப்பதற்குரிய இணக்கப்பாட்டை இரு தரப்புகளும் எட்டிய பின்னர், இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க வைப்பதற்குரிய முயற்சியே இடம்பெற்றுவருகின்றது. அத்துடன், இருவரும் இணைந்து கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்த வேண்டும் […]

இலங்கை

இலங்கையில் சீரற்ற காலநிலை – 4 பேர் மரணம் – ரயில் சேவை பாதிப்பு

  • October 23, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலையின் விளைவுகளால் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 75 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2 ஆயிரத்து 625 குடும்பங்களில் இருந்து 10 ஆயிரத்து 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மொத்தமாக 4 பேர் மரணத்தைத் தழுவியுள்ளார்கள். இரண்டு வீடுகள் முழுமையாகவும், 402 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. காலி மாவட்டத்தில் பாதிப்புக்கள் அதிகம் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். மஹஓயா, தெதுறுஓயா ஆற்றுப்படுகைகளுக்காக விடுக்கப்பட்ட வெள்ள அபாய முன்னெச்சரிக்கை […]

உலகம் செய்தி

தென் கொரியாவில் கரப்பான் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்திய பெண் – ஒருவர் பலி

  • October 23, 2025
  • 0 Comments

தென் கொரியாவின் ஓசான் (Osan) நகரில், கரப்பான் பூச்சியை எரிக்க முயன்றபோது ஏற்பட்ட தீ விபத்தில், அயல் வீட்டில் வசித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் இருந்து தப்ப முயன்றபோது ஜன்னல் வழியாக விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீ வைத்த இளம் பெண்ணுக்குக் கைதாணை பிறப்பிக்கப்படும் என்று தென் கொரியக் காவல்துறை தெரிவித்துள்ளது. 20 வயது மதிக்கத்தக்க அந்த இளம்பெண், எளிதில் தீப்பற்றக்கூடிய தெளிப்பான் (ஸ்ப்ரே) மற்றும் […]

உலகம்

மீண்டும் சிக்கலில் சிக்கிய டெஸ்லா – மீளப்பெறப்படும் 12000 வாகனங்கள்

  • October 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 12,000க்கும் அதிகமான கார்களை டெஸ்லா (Tesla) நிறுவனம் திரும்பப் பெறுவதாக தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு Model 3 மற்றும் 2026ஆம் ஆண்டு Model Y வாகனங்கள் உட்பட 12,963 கார்கள் இவ்வாறு மீளப் பெறப்படுகின்றன. பேட்டரி பேக் பாகத்தில் ஏற்பட்ட ஒரு குறைபாட்டின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்தக் குறைபாடு திடீரென ஓட்டுநர் சக்தியை (Driving Power) இழக்க வழிவகுக்கும். இதனால் விபத்து […]

உலகம் செய்தி

அரபிக் கடலில் $1 பில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த பாகிஸ்தான் கடற்படை

  • October 22, 2025
  • 0 Comments

சவுதி தலைமையிலான ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் (CMF) ஒரு பகுதியாக செயல்படும் பாகிஸ்தான் கடற்படை, அரேபிய கடல் வழியாக பயணித்த இரண்டு கப்பல்களில் இருந்து கிட்டத்தட்ட $1 பில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. கடந்த வாரம், பாகிஸ்தான் கடற்படை 48 மணி நேரத்தில் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் கப்பல்களில் இருந்து $972 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்ததாக ஒருங்கிணைந்த கடல்சார் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அக்டோபர் 18 அன்று நடந்த முதல் நடவடிக்கையில், […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

சிரியாவில் செட்னயா(Sednaya) சிறைச்சாலைக்கு பொறுப்பான முன்னாள் ராணுவ அதிகாரி கைது

  • October 22, 2025
  • 0 Comments

முன்னாள் சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் (Bashar al-Assad) ஆட்சியின் போது, ​​மோசமான செட்னயா (Sednaya) சிறையில் கைதிகளை தூக்கிலிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டமாஸ்கஸ் (Damascus) மாகாணத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, ஜெனரல் அக்ரம் சலூம் அல்-அப்துல்லாவை (Akram Saloum al-Abdullah) கைது செய்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்ரம் சலூம் அல்-அப்துல்லாவை, செட்னயா சிறையில் கைதிகளை சித்திரவதை செய்ததாக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. டமாஸ்கஸுக்கு வெளியே உள்ள […]

ஐரோப்பா செய்தி

நெதர்லாந்தில் முதல் முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிப்பு

  • October 22, 2025
  • 0 Comments

நெதர்லாந்தில் (Netherland) எளிதில் பரவக்கூடிய mpox வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம், நலன்புரி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜான் அந்தோனி ப்ரூய்ன் (Jan Anthony Bruyn) தெரிவித்துள்ளார். அக்டோபர் 17ம் தேதி அடையாளம் காணப்பட்ட இந்த mpox 1b வகையான தொற்று நாட்டில் கண்டறியப்பட்ட முதல் வழக்கு என்று அமைச்சர் ஜான் அந்தோனி ப்ரூய்ன் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபருக்கு mpox தடுப்பூசி போடப்பட்டு இல்லை என்றும், அவர் சமீபத்தில் வெளிநாட்டு பயணங்கள் செய்யாதவர் என்றும் […]

error: Content is protected !!