செய்தி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்யா -உக்ரைன் போரில் மொஸ்கோ மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.  இதன்காரணமாக எண்ணெய் விலையானது இன்று 3.4 சதவீதத்தால்  உயர்ந்துள்ளது. இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் இப்போது  64.73 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. போர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சமாதான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவும் ட்ரம்ப் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft ) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய […]

பொழுதுபோக்கு

அனல் பறக்கும் சரிகமப மேடை…! நடுவர்களின் அதிரடி தீர்ப்பு… சபேசனின் நிலை என்ன?

  • October 23, 2025
  • 0 Comments

தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர இளைஞர்களுக்கு கிடைத்த சரியான ஒரு இடம்தான் ஜீ தமிழ் சரிகமப மேடை. இந்த மேடையை ஏரளமான இலங்கையர்களும் அலங்கரித்துள்ளனர். எந்த சேனலிலும் கிடைக்காத அந்தஸ்தும் பெருமையும் ஜீ தமிழில் இலங்கையர்களுக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான சரிகமப சீசன் 5 இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் இலங்கையரான சபேசனும் பைனலிஸ்ட் கனவுடன் காத்திருக்கின்றார். இறுதிச்சுற்றுக்கான இந்த வாரம் நிகழ்ச்சியில் Duet […]

பொழுதுபோக்கு

மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

  • October 23, 2025
  • 0 Comments

மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று காலமானார். நடிகை மனோரமா 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் கோலோச்சி, 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, உலக சாதனை புரிந்தவர். பூபதி, மனோரமாவின் ஒரே மகனாவார். பூபதி, சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பூபதியின் மறைவு, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. காலஞ்சென்ற பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மனோரமாவின் ரசிகர்களும், திரையுலகினரும் பூபதி மறைவுக்குத் தங்கள் ஆழ்ந்த […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த மூவர் லண்டனில் கைது!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்ய உளவுத்துறை சேவைகளுக்கு உதவிய சந்தேகத்தின்பேரில் மூன்று பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ காவல் துறை தெரிவித்துள்ளது. 48, 45 மற்றும் 44 வயதுடைய ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பயங்கரவாத எதிர்ப்பு காவல் துறையின் தலைவர் கமாண்டர் டொமினிக் மர்பி (Dominic Murphy) “வெளிநாட்டு உளவுத்துறை சேவைகளால் ‘பிரதிநிதிகள்’ என்று […]

இலங்கை

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்!!

  • October 23, 2025
  • 0 Comments

இறுதிப்போரின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக நீதி கிட்டாது. எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” 2009 இறுதிப்போரின்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த மக்கள், புலிகள் சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தகவல் […]

பொழுதுபோக்கு

சமூக பிரச்சினைகளை தன் பாட்டில் அடக்கும் இலங்கையின் சிறந்த பாடகர் சிவி லக்ஷ்

  • October 23, 2025
  • 0 Comments

மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவை நோக்கி ஓடும் அனைவரும் பல தடைகளை பார்த்திருப்பார்கள். அனைத்து தடைகளையும் தவிடுபொடியாக்கி சாதித்துக்காட்டியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில் நம்நாட்டு இளைஞர் யுவதிகளிடமும் பல திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை வெளிக்கொண்டுவரும் பலரும் சாதனையாளர்கள் தான். தமக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரை அவர்கள் கட்டாயம் போராடத்தான் வேண்டும். போராடி தோற்றவர்கள் உலகில் இல்லை என்றே கூறலாம். இவ்வாறு வெற்றி கண்டவர்களில் ஒருவர்தான் இலங்கை ராப் […]

இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் கார்பைடு துப்பாக்கியால்(carbide gun) பார்வையை இழந்த 14 குழந்தைகள்

  • October 23, 2025
  • 0 Comments

இந்தியாவில் ஒவ்வொரு தீபாவளியின் போதும் பட்டாசுகளில் புதிதாக ஓர் அம்சம் அறிமுகம் செய்யப்படும். இந்த ஆண்டு அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட ‘கார்பைடு துப்பாக்கி’(carbide gun). உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடிக்கும் துப்பாக்கி ஆகும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 122க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் பார்வையை இழந்துவிட்டனர். அக்டோபர் 18ஆம் திகதி அரசாங்கம் ‘கார்பைடு துப்பாக்கி’ விற்பனை செய்யத் தடை விதித்திருந்தது. இருப்பினும், […]

ஐரோப்பா

அயர்லாந்தில் (Ireland) புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் – 23 பேர் கைது!

  • October 23, 2025
  • 0 Comments

அயர்லாந்தின் (Ireland) தலைநகரான டப்ளினில் (Dublin) புகலிட விடுதி அருகே இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடனான மோதல்களில் காயமடைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 வயதுடைய சிறுமி ஒருவர் புகலிடக் கோரிக்கையாளரால் துஷ்பிரயோகம் செய்யப்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது. சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிட்டிவெஸ்ட் ஹோட்டலில் (Citywest Hotel […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 புதிய சுய-பதிவு இயந்திரங்கள் அறிமுகம்

  • October 23, 2025
  • 0 Comments

பயணிகளின் விமானப் பயணத்துக்கான பதிவுகளை எளிதாக்கவும், நெரிசலைக் குறைக்கவும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 புதிய சுய பதிவு (Self-Check-in Kiosks) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தரை கையாளுகை நிறுவனம் (SriLankan Airlines Ground Handling) ஆகியன இணைந்து கூட்டாக அறிமுகப்படுத்தியுள்ளன. புதிய இயந்திரங்கள் திறம்பட செயல்படவும், பயணிகளுக்கு மென்மையான அனுபவத்தை வழங்கவும் […]

இலங்கை

சாமர சம்பத் எம்.பிக்கு பொலிஸ் அமைச்சர் பதிலடி!

  • October 23, 2025
  • 0 Comments

நாட்டுக்காக சிங்கம்போல வேலைசெய்துள்ளேன். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது கிடையாது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே பொலிஸில் இருந்து விலகினேன்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கவால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” நான் இந்நாட்டில் சிங்கம்போல் வேலை செய்துள்ளேன். தீவிரவாத செயலில் ஈடுபடவில்லை. பொலிஸில் சிறப்பாக செயல்பட்டு, தனிப்பட்ட காரணத்துக்காவே விலகினேன். இவர் […]

error: Content is protected !!