உலகம்

சீனாவில் விசித்திரத் திருடன் – பெண்ணுக்கு வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

  • October 29, 2025
  • 0 Comments

சீனாவில் சூட்சுமமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான சௌ என்ற நபர் வீடொன்றுக்குள் பெண்ணை மிரட்டித் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளார். கண்காணிப்பு கெமராவில் சிக்காமல் இருக்கும் வகையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட திருடன், அதனை கொள்ளையடிக்க விரும்பிய பெண்ணின் வீட்டில் வைத்துச் செல்லுமாறு விநியோக ஊழியர் ஒருவருக்குப் பணம் செலுத்தியுள்ளார். அவ்வாறு செய்யப்பட்ட நிலையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்திருந்த திருடன், வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை அச்சுறுத்தியுள்ளார். இதன்போது […]

இலங்கை செய்தி

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 82 பாதாள குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடிவிறாந்து!

  • October 29, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்கத் தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். “216 பேருக்கு எதிராகச் சிவப்புப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாள குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.” […]

உலகம்

காஸாவை உலுக்கிய இஸ்ரேலிய தாக்குதல் – 30 பேர் பலி

  • October 29, 2025
  • 0 Comments

காஸா பகுதியில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தங்களை மீறியதாகக் கூறி, காஸா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு இராணுவத்திற்கு […]

இலங்கை செய்தி

கொழும்பில் மக்கள் குடியிருப்பில் பாரிய தீ விபத்து – மக்களை வெளியேற்றத் தீவிர போராட்டம்

  • October 29, 2025
  • 0 Comments

நாரஹேன்பிட்டி, தபர மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேல் தளங்களில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக இரண்டு ஸ்கைலிப்ட் (Skylift) வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், தீ விபத்துக் காரணமாக வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த […]

பொழுதுபோக்கு

விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமான சின்னத்திரை நடிகை

  • October 29, 2025
  • 0 Comments

கன்னட சின்ன திரை நடிகையான திவ்யா சுரேஷ் ராவ் என்பவருக்கு பெங்களூரு மாநகரின் பயாதரயணாபுரத்தில் கடந்த அக்டோபர் 4ஆம் திகதி இடம்பெற்ற கார் விபத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவ நாளன்று கிரண் என்பவர் தமது உறவுக்கார பெண்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, வண்டியின் பின்னால் ஒரு கார் மோதியதாக புகார் அளித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த கார் மின்னல் வேகத்தில் மாயமானதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் […]

இலங்கை

இலங்கை, ஜப்பான் கடற்படைக் கூட்டுப் பயிற்சி – கொழும்பு வந்தது போர்க்கப்பல்!

  • October 29, 2025
  • 0 Comments

ஜப்பானிய கடற்படையின் ‘அகிபோனோ’ என்ற போர்க்கப்பல், நேற்றுக் காலை நல்லெண்ணப் பயணமாகக் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 150.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரி போர்க்கப்பலான ‘அகிபோனோ’வில், 158 மாலுமிகள் உள்ளனர். கொழும்பில் தரித்து நிற்கும் போது, கப்பலின் பணியாளர்கள் இலங்கையின் சில சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவார்கள். அத்துடன், இரு கடற்படைப் படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்ட இலங்கை கடற்படையுடனான தொழில்முறைப் பயிற்சிகளும் இடம்பெறவுள்ளன. ஜப்பானிய போர்க்கப்பல், கொழும்பு கடலில் இலங்கை கடற்படைக் கப்பலுடன் […]

கருத்து & பகுப்பாய்வு

விண்வெளியில் நடந்த அதிசயம்! ஆச்சரியமிக்க கோள் அமைப்பு கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் வியப்பு

  • October 29, 2025
  • 0 Comments

விண்வெளிப் பரப்பில் புதிய வகையிலான கோள் அமைப்பினை நாசா கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞான உலகில் வியப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரே இரட்டை நட்சத்திர அமைப்பைச் சுற்றிவரும் மூன்று பூமி அளவுள்ள புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்தக் கோள் அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, இதுவரை காலமும் விஞ்ஞானிகள் நம்பியிருந்த விண்வெளி விதிகளைத் தலைகீழாக மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நெருக்கமான நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதியில் கடுமையான ஈர்ப்பு விசை காரணமாகக் கோள்கள் […]

இலங்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு அழுத்தம்!

  • October 29, 2025
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழியை விரைவில் நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும். அதுவரையில் தடுப்புக் காவல் உத்தரவைப் பெறுவதும் நிறுத்தப்பட வேண்டும். கடந்தகாலங்களில் அரசியல் பழிவாங்கலுக்கே அந்த ஏற்பாடு பயன்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புக் காவலால்தான் […]

இலங்கை

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு முடிவு கட்டுமாறு கோரிக்கை

  • October 29, 2025
  • 0 Comments

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம். அச் சபைகளை மக்கள் பிரதிநிதிகளே ஆள வேண்டும். எனவே, உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தினார். பதுளையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும். பல வருடங்களாக இக்கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பற்றி […]

ஐரோப்பா

லண்டனில் கண் பார்வை இழந்த பலருக்கு மீண்டும் கண் பார்வை! வைத்தியர்களின் சாதனை

  • October 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் லண்டனில் கண் பார்வை இல்லாதவர்கள் மேற்கொண்ட சிகிச்சையின் மூலம் மீண்டும் கண் பார்வை கிடைத்துள்ளமை மருத்துவ உலகின் புரட்சியாக கருதப்படுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் விழித்திரைச் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) நோயால் பார்வையை இழந்தவர்களுக்கு, கண்களின் பின்புறத்தில் நுண்சில்லு (Microchip) பொருத்தப்பட்டு அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. இந்த புரட்சிகரமான வெற்றியால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த முறையின் கீழ் சிகிச்சை வழங்கி கண்பார்வையை வழங்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த […]

error: Content is protected !!