ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்ட போத்தல் – இரு போர் வீரர்களின் செய்தி!
முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸின் போர்களங்களுக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் எழுதிய கடிதம் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள எஸ்பெரன்ஸ் (Esperance)அருகே உள்ள கடற்கரையொன்றில் இருந்து குறித்த போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்ணாடி குவளையொன்றில் ஆகஸ்ட் 15, 1916 என்று திகதியிடப்பட்ட 27 வயதான மால்கம் நெவில் (Malcolm Neville) மற்றும் 37 வயதான வில்லியம் ஹார்லி (William Harley) ஆகிய இரு வீரர்கள் பென்சிலால் எழுதிய […]













