பொழுதுபோக்கு

லியோவுடன் இணையும் “பென்ஸ்”… இதை எதிர்பார்த்தீர்களா?

  • October 29, 2025
  • 0 Comments

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், கலெக்ஷனில் கல்லா கட்டியது. இது கைதி மற்றும் விக்ரம் திரைப்பட கதாபாத்திரங்களுடன் உருவாகியிருந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது. ஆனால், லியோவில் விஜய் குறித்த பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்ததாக சில தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் […]

உலகம்

மத்திய வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ;குறைந்தது 9 பேர் பலி, 5 பேர் மாயம்

  • October 29, 2025
  • 0 Comments

வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாகவும், ஐவர் காணாமல் போயுள்ளனர் என்று இன்று(29) அரசாங்கம் தெரிவித்தது. வெள்ளத்தில் 103,000க்கும் மேற்பட்ட வீடுகளும் மூழ்கியுள்ளன. நாட்டின் பிரபல சுற்றுலாத் தளங்களான ஹியூ(Hue) மற்றும் ஹோய் ஆன்(Hoi An) உள்ளிட்ட நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளதாக அரசாங்கப் பேரிடர் அமைப்பின் அறிக்கை தெரிவித்தது. அதனால் அங்கு அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோய் ஆன் […]

இலங்கை

டிசம்பர் முதல் நாடு முழுவதும் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்தும் வசதி

  • October 29, 2025
  • 0 Comments

வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே GovPay மூலம் அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala ) தெரிவித்துள்ளார். அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பொழுதுபோக்கு

சக்தித் திருமகன் – திருட்டுக் கதை : ஆதாரங்களை பகிரங்கப்படுத்திய நபர்

  • October 29, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் ஆண்டனியின் 25 வது படமாக உருவான சக்தித் திருமகன் படத்தின் கதை தன்னிடமிருந்து திருடப்பட்டதாக ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு இந்த படத்தை எழுதி இயக்கியிருந்தார். இப்படம் கடந்த செப். 19 திரைக்கு வந்தது. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளைக் கேள்விகேட்கும் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். இந்த நிலையில், இப்படத்தின் கதை தன்னிடமிருந்து திருடப்பட்டதாக முகநூலில் சுபாஸ் சுந்தர் என்பவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து சுபாஸ் […]

இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கை தமிழர்கள்!

  • October 29, 2025
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூன்று பேரை இந்திய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இசைவேந்தன், யோகராசா, சுஜீவன் ஆகிய மூன்று பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் இலங்கையை வந்தடைந்த நிலையில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரும் கடந்த  15 நாட்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்னை மண்ணடியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களிடம்  இந்தியாவில்  தங்குவதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது […]

இலங்கை

புத்தளத்தில் கடலில் மிதந்து வந்த போத்தல் – பறிபோன உயிர்கள்!

  • October 29, 2025
  • 0 Comments

புத்தளத்தில் கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பானத்தை அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொரோச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி குடிலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நால்வர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் அதில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனையில் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதன்புாது மீன்பிடி குடிலில் இருந்து மற்றொரு நபரின் சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் […]

உலகம்

சீனாவில் விசித்திரத் திருடன் – பெண்ணுக்கு வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி

  • October 29, 2025
  • 0 Comments

சீனாவில் சூட்சுமமான முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான சௌ என்ற நபர் வீடொன்றுக்குள் பெண்ணை மிரட்டித் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளார். கண்காணிப்பு கெமராவில் சிக்காமல் இருக்கும் வகையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட திருடன், அதனை கொள்ளையடிக்க விரும்பிய பெண்ணின் வீட்டில் வைத்துச் செல்லுமாறு விநியோக ஊழியர் ஒருவருக்குப் பணம் செலுத்தியுள்ளார். அவ்வாறு செய்யப்பட்ட நிலையில், மரப்பெட்டிக்குள் ஒளிந்திருந்த திருடன், வீட்டுக்குள் நுழைந்து பெண்ணை அச்சுறுத்தியுள்ளார். இதன்போது […]

இலங்கை செய்தி

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 82 பாதாள குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடிவிறாந்து!

  • October 29, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்கத் தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். “216 பேருக்கு எதிராகச் சிவப்புப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாள குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.” […]

உலகம்

காஸாவை உலுக்கிய இஸ்ரேலிய தாக்குதல் – 30 பேர் பலி

  • October 29, 2025
  • 0 Comments

காஸா பகுதியில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் நிறுத்தங்களை மீறியதாகக் கூறி, காஸா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு இராணுவத்திற்கு […]

இலங்கை செய்தி

கொழும்பில் மக்கள் குடியிருப்பில் பாரிய தீ விபத்து – மக்களை வெளியேற்றத் தீவிர போராட்டம்

  • October 29, 2025
  • 0 Comments

நாரஹேன்பிட்டி, தபர மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேல் தளங்களில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக இரண்டு ஸ்கைலிப்ட் (Skylift) வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், தீ விபத்துக் காரணமாக வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த […]

error: Content is protected !!