இலங்கை செய்தி

இலங்கை: மொரகஹஹேன அருகே இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் சாரதி மரணம்

  • November 3, 2025
  • 0 Comments

களுத்துறை மாவட்டம் மொரகஹஹேன (Moragahena) நகருக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் ஹொமாகம(Homagama) பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். ஹொரணையில்(Horana) இருந்து மொரகஹேன நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி திடீரென கவிழ்ந்து எதிர் பாதையில் சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்கு பிறகு குறித்த நபர் ஹொரணையில் உள்ள அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில், விபத்துக்கான […]

ஐரோப்பா செய்தி

ஜார்ஜியா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இளம் பிரிட்டிஷ் கர்ப்பிணி பெண்

  • November 3, 2025
  • 0 Comments

தாய்லாந்தில்(Thailand) இருந்து கஞ்சா மற்றும் ஹாஷிஷ்(hashish) கடத்தியதற்காக ஜார்ஜியாவில்(Georgia) சிறையில் அடைக்கப்பட்ட கர்ப்பிணி பிரிட்டிஷ் இளம்பெண் பெல்லா கல்லி(Bella Gully) ஆறு மாதங்களுக்கு பிறகு ஒரு மனு ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். விடுவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு தான் விடுதலை செய்யப்பட்டது எதிர்பார்க்கவில்லை என்றும், இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதாகவும் 19 வயதான பெல்லா கல்லி குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள பில்லிங்ஹாமைச்(Billingham) சேர்ந்த பெல்லா கல்லி, மே மாதம் தாய்லாந்தில் காணாமல் போன […]

இலங்கை செய்தி

அக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

  • November 3, 2025
  • 0 Comments

அக்டோபர் மாதத்தில் மொத்தம் 165,193 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. இது 2024ம் ஆண்டு அக்டோபர் மாத வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பு ஆகும். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் இந்தியாவில்(India) இருந்து 29.1% அதாவது 48,113 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். மேலும், பிரித்தானியாவிலிருந்து(UK) 12,934 பேர், ரஷ்யாவிலிருந்து(Russia) 11,496 பேர், சீனாவிலிருந்து(China) 10,864 பேர் மற்றும் 9,753 […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மாலத்தீவில் 2007க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

  • November 3, 2025
  • 0 Comments

ஜனவரி 2007க்குப் பிறகு பிறந்த அனைவருக்கும் புகையிலை புகைப்பதைத் தடைசெய்துள்ள மாலத்தீவு(Maldives), நாடு தழுவிய தலைமுறை புகையிலை தடையை அமல்படுத்திய உலகின் ஒரே நாடாக மாறியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி முகமது முய்சுவால்(Mohamed Muizzu) தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. “பொது சுகாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் புகையிலை இல்லாத தலைமுறையை ஊக்குவிப்பதே இதன் முதன்மை நோக்கம்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. “புதிய விதியின் கீழ், ஜனவரி 1, 2007 அன்று […]

இந்தியா செய்தி

ஜெய்ப்பூரில் வேகமாக வந்த லாரி மோதி 14 பேர் உயிரிழப்பு

  • November 3, 2025
  • 0 Comments

ஜெய்ப்பூரில்(Jaipur) வேகமாக வந்த டிப்பர் லாரி பல வாகனங்கள் மீது மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். ஜெய்ப்பூரில் உள்ள லோஹா மண்டி(Loha Mandi) பகுதியில் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் மீது மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சைக்காக உள்ளூர் கன்வாடியா(Kanwatia) மருத்துவமனைக்கும் பலத்த காயமடைந்தவர்கள் சவாய் மான் சிங்(Sawai Man Singh) மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் […]

உலகம் செய்தி

மங்கோலியாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

  • November 3, 2025
  • 0 Comments

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து(San Francisco) டெல்லிக்கு(Delhi) செல்லும் ஏர் இந்தியா(Air India) விமானம், மங்கோலியாவின்(Mongolia) உலான்பாதரில்(Ulaanbaatar) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா வழியாக இயக்கப்படும் AI174 ஏர் இந்தியா விமானம், உலான்பாதரில் பாதுகாப்பாக தரையிறங்கியது, தற்போது தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், “எதிர்பாராத சூழ்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். ஏர் இந்தியாவின் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது,” என்று விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகவும் ஆபத்தான கடல் உயிரினம்

  • November 3, 2025
  • 0 Comments

மிதக்கும் பயங்கரங்கள் என்றும் அழைக்கப்படும் பல போர்த்துகீசிய மேன் ஓ’ வார்(Portuguese Man O’ War) உயிரினங்கள், பிரித்தானியாவின் பிரபலமான கடற்கரையில் கரை ஒதுங்கியதை அடுத்து, வேல்ஸில்(Wales) கடற்கரைக்குச் செல்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போர்ட் டால்போட்(Port Talbot) கடலோர காவல்படை மக்கள் விழிப்புடன் இருக்கவும், உயிரினங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. தற்போது அபெராவோன்(Aberavon) கடற்கரையில் காணப்படும் இந்த உயிரினம் இதற்கு முன்னதாக பெம்பிரோக்ஷயர்(Pembrokeshire), க்வைனெட்(Gwynedd) மற்றும் ஆங்கிள்சி(Anglesey) கடற்கரைகளிலும் காணப்பட்டதாக Express.co.uk தெரிவித்துள்ளது. போர்த்துகீசிய மேன் […]

உலகம் செய்தி

80 வயதில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா

  • November 3, 2025
  • 0 Comments

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா(Khaleda Zia) பிப்ரவரி மாதம் எதிர்பார்க்கப்படும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது அரசியல் கட்சி தெரிவித்துள்ளது. 80 வயதான கலீதா ஜியா,மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார் என்று மூத்த வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர்(Mirza Fakhrul Islam Alamgir) உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2008 முதல் பிரித்தானியாவில் வசிக்கும் கலீதா ஜியாவின் 59 வயது மகன் தாரிக் ரஹ்மானும்(Tarique Rahman) தேர்தலில் போட்டியிடுவார் என்று மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் […]

செய்தி விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான T20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்

  • November 3, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka)  பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இதேவேளை கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவின் கம்சட்கா  பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

error: Content is protected !!