சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்!!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாதது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார். 2026 சீர்திருத்தங்களுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா மற்றும் ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றபோது, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து […]













