ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)





