இந்தியாவிற்கு எதிரான T20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்
2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் இடையிலான நான்காவது போட்டி 6ம் திகதியும் ஐந்தாவது போட்டி 8ம் திகதியும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான T20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய முன்னணி வீரர் டிராவிஸ் ஹெட்(Travis Head) விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 21ம் திகதி ஆரம்பிக்கப்படும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ்(Ashes) டெஸ்ட் தொடர் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.





