இலங்கை செய்தி

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

  • November 4, 2025
  • 0 Comments

இலங்கையின் நிதியமைச்சின் முன்னாள்  செயலாளர் சரித ரத்வத்தே (Charitha Ratwatte)  இலஞ்ச  ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில்  இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை சுமார் 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய  கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் தொடர்புடைய வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிபதி  உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் 03 மணிநேரம் இலவச மின்சாரத்தை பெறும் மக்கள்!

  • November 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2026 ஆம் ஆண்டு ஜுலை மாதம் “சூரிய பகிர்வு” (solar sharer) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் (Chris Bowen) இன்று அறிவித்துள்ளார். இதன்மூலம் ஸ்மார்ட் மீட்டர்களைக் ( smart meters) கொண்ட வீடுகளுக்கு தினமும் குறைந்தது மூன்று மணிநேரம் இலவச சூரிய மின்சாரத்தை வழங்க முடியும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சி ஆரம்பத்தில் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales), குயின்ஸ்லாந்து (Queensland)  மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் […]

உலகம் செய்தி

ஆங் சான் சூகியை (Aung San Suu Kyi) நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்!

  • November 4, 2025
  • 0 Comments

மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதி ஆங் சான் சூ கியை (Aung San Suu Kyi) உடனடியாக விடுதலை செய்யுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) வலியுறுத்தியுள்ளார். தற்போது இராணுவ காவலில் உள்ள அவருக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மக்ரோன் மேற்படி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், உடல் நிலை மோசமடைந்துவருகின்ற  நிலையில், பொருத்தமான சிகிச்சையை அணுகுவதில் உள்ள சிரமங்கள் தொடர்பில் ஆங் சான் சூகியின் (Aung San Suu […]

இலங்கை

வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது என உறுதி!

  • November 4, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 2026 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. குறித்த வரவு- செலவுத் திட்டம் எவ்வாறு அமையும் என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது […]

பொழுதுபோக்கு

“குழந்தைக்கு நான் தான் அப்பா” உண்மையை ஒப்புக்கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ்

  • November 4, 2025
  • 0 Comments

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா விவகாரத்திற்கு  ஒரு முடிவு  இல்லையா?  என புலம்பிக்கொண்டு  இருந்தவர்களுக்கு  இன்று   ஒரு பதில் கிடைத்துவிட்டது. மகளிர் ஆணையத்தின் விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிஸில்டாவைக் காதலித்து திருமணம் செய்ததாகவும், குழந்தைக்கு நானே அப்பா” என்றும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த தகவலை ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா இவர்களுக்கு இடையே இருந்த உறவு குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அவர், குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து பல தகவல்களையும் சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்து இருந்தார். தற்போது குழந்தைக்கு […]

இலங்கை

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் சஜித்!

  • November 4, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புது டெல்லியில்  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் இலங்கையின் தொழிற்துறையை வேகமாக முன்னேற்றம் காணச் செய்ய முடியும் என்று இந்திய நிதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார். வலுவான உள்நாட்டு தொழிற்துறைகள் மூலம் இலங்கையின் பொருளாதார இறையாண்மையை மேம்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2022 இல் ஏற்பட்ட நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய […]

ஐரோப்பா செய்தி

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய வாக்னர் (Wagner) படையினர்!

  • November 4, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய எல்லையிலிருந்து சில அடி தொலைவில்  வாக்னர் (Wagner)  தனியார் இராணுவத்தின் கொடியுடன் பயணித்த படகில் ரஷ்ய துருப்புகள் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் மற்றுமோர் போர் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. மொஸ்கோவின் FSB பாதுகாப்பு சேவையுடன் இணைக்கப்பட்ட எல்லைப் படைக் கப்பல், நேட்டோ நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள நர்வா (Narva) நதியில் பயணிப்பதை காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் இது எஸ்டோனியாவிற்கு (Estonia) பெரும் […]

இலங்கை

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்!

  • November 4, 2025
  • 0 Comments

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுவருகின்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு , “ நாடளாவிய ரீதியில் மீள்புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை […]

இலங்கை

சிறப்பு அதிரடிப்படையினருக்காக (STF) புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

  • November 4, 2025
  • 0 Comments

சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிறப்பு அதிரடிப்படை முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில்  76 பிரதான முகாம்கள், 23 துணை முகாம்கள் மற்றும் 14 சிறப்பு பிரிவுகளை இயக்குகிறது. இந்நிலையில் அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 314 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள்ள 90  சதவீதமானவை  10 ஆண்டுகளுக்கும் மேலானவை என்றும் அவற்றில் சிலவற்றில் தொழில்நுட்ப குறைப்பாடுகள் […]

பொழுதுபோக்கு

இராஜராஜ சோழனாக அஜித்! அடுத்த வரலாற்று சம்பவம் லோடிங்…

  • November 4, 2025
  • 0 Comments

இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவது தற்போதைய காலக்கட்டத்தில் சாதாரண ஒரு விடயமாகி விட்டது. அதுவும் இறந்தவர்களை மீண்டும் இருப்பதுபோல் காட்டுவது தொழில்நுட்பத்தின், விஞ்ஞான உலகின் அதி உச்சம் என்றும் கூறலாம். இப்படித்தான் கடந்த நாட்களில் நடிகர்களின் AI புகைப்படங்கள் வெளியாகின. இதில் நடிகர் அஜித்தின் இராஜராஜ சோழன் படங்கள் செம்ம வைரலாகின. இது உண்மையாகாதா என்று எண்ணுவோர் ஏராளம் பேர் இருக்கின்றனர். அஜித்தின் தோற்றமும், அழகும், நடையும் ஒரு ராஜாவுக்கு நிகராகவே இருக்கும். இது இயக்குனர் […]

error: Content is protected !!