உலகம் செய்தி

கிரேக்கத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்றை சுற்றிவளைத்த கடற்கொள்ளையர்கள்!

  • November 6, 2025
  • 0 Comments

கிரேக்கத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சோமாலியா கடற்கரையில் லாட்ஸ்கோ மரைன் மேனேஜ்மென்ட் (Latsco Marine Management) நிறுவனத்திற்கு சொந்தமான ஹெல்லாஸ் அப்ரோடைட் (Hellas Aphrodite) என்ற கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. படகொன்றில் வந்த கடற்கொள்ளையர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த பகுதியில் பயணிக்கும் பிற […]

பொழுதுபோக்கு

துல்கர் சல்மானின் ‘காந்தா’ டிரைலர் வெளியானது

  • November 6, 2025
  • 0 Comments

பிரபல நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், நடிகர்கள் சமுத்திரகனி, பாக்ய ஸ்ரீ போஸ், ரானா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு, இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் […]

இலங்கை

வரவு செலவு திட்டம் குறித்து மக்களின் கருத்துக்களை கோர தயாராகும் எதிர்கட்சி!

  • November 6, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளைய தினம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டம் குறித்து மக்களின் கருத்துக்களை கோர எதிர்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைமை கொறடா கயந்த கருணாதிலக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை oppositionleaderoffice@gmail.com அல்லது WhatsApp 0702067296 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறியுள்ளார். வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போது பொதுமக்களின் கருத்துக்களை நாங்கள் முன்னிலைப்படுத்துவோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள்

  • November 6, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக எதிரணிகளின் சார்பில் பொதுவேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட எதிரணிகளிலுள்ள சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் அரசாங்கத்தக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளன. இந்நடவடிக்கைக்கு பிறகும் எதிரணி கூட்டு தொடர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிசபைத் தேர்தல்களில் […]

பொழுதுபோக்கு

பேராதரவைப் பெற்ற “ஹார்ட் பீட் – 2” நிறைவு பெற்றது… கிளைமேக்ஸில் நடந்த டுவிஸ்ட்!

  • November 6, 2025
  • 0 Comments

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற பிரபலமான வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்று ‘ஹார்ட் பீட்’. முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியும், அதரவும் இரண்டாவது சீசன் உருவாக காரணமாக இருந்தது. இந்த நிலையில், ஹார்ட் பீட் – 2 இணையத் தொடர் 100 எபிசோடுகளுடன் இன்று நிறைவடைந்துள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்த இந்த தொடரில், நடிகை அனுமோள் ரதியாக சிறப்பாக நடித்திருந்தார். விஜய்யாக […]

இந்தியா செய்தி

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை!

  • November 6, 2025
  • 0 Comments

பல தசாப்தங்களாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு வாக்குரிமை மற்றும் முழு குடியுரிமை வழங்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராம்தாஸ் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் 40 விமான நிலையங்களில் சேவைகளை குறைக்க தீர்மானம்!

  • November 6, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்தின் பணி நிறுத்தங்கள் காரணமாக சுமார் 40 விமான நிலையங்களின் சேவை குறைக்கப்படும் என போக்குவரத்துச் செயலாளர் சீன் டஃபி (Sean Duffy) எச்சரித்துள்ளார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சோர்வு குறித்து முறைப்பாடு அளித்துள்ளதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏறக்குறைய ஒரு நாளைக்கு 3,500 முதல் 4,000 விமானங்கள் இரத்து அல்லது தாமதமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் செலவீன சட்டமூலம் நிறைவேற்றப்படாத நிலையில் கருவூலத்துறைக்கான நிதியை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 1.4 மில்லியன் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் – சுயாதீன விசாரணைக்கு உத்தரவு!

  • November 6, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அல்ஜீரிய (Algeria) பிரஜையான பிராஹிம் கடூர்-செரிஃப் (Brahim Kaddour-Cherif) ,    வில்லியம் ஸ்மித் (William Smith) ஆகிய குற்றவாளிகள் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பாலியல் குற்றவாளியான அல்ஜீரிய நபர் பிரஹிம் கடூர்-செரிஃப் (Brahim Kaddour-Cherif) ,   அக்டோபர் 29 அன்று தவறுதலாக வாண்ட்ஸ்வொர்த் (Wandsworth) சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல் நவம்பர் மாதம் […]

இலங்கை செய்தி

வரவு செலவு திட்டம் – IMF இன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா?

  • November 6, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாளைய தினம் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார். 2.3% முதன்மை உபரி இலக்கை அடைவது மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பொது வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% ஆக உயர்த்துவது உள்ளிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களை முதன்மைப்படுத்தும் வகையில் இந்த வரவு செலவு திட்டம் […]

இலங்கை செய்தி

மியன்மாரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பியோடிய இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை!

  • November 6, 2025
  • 0 Comments

மியான்மரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பிச் சென்ற நூற்றுக்கணக்கான இந்தியர்களில் முதல் தொகுதியினர் இன்று இந்தியாவிற்கு திருப்பியனுப்படவுள்ளனர். மியன்மாரின் எல்லை நகரமான மியாவதியின் (Myawaddy)புறநகரில் உள்ள கே.கே. பார்க் (KK Park)  என்று அழைக்கப்படும்  மையம்  எல்லை தாண்டிய ஆன்லைன் மோசடிகள் மற்றும் சட்டவிரோத சூதாட்டத்திற்கு பிரபலமான இடமாகும். கடந்த ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இந்த பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது  28 நாடுகளைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் தாய்லாந்திற்கு […]

error: Content is protected !!