இலங்கை செய்தி

யாழில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்

  • November 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் 21 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த பெண் ஒருவர், மூன்று குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதான யோகராசா மயூரதி என்ற தாயே நேற்று அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் ஏழாம் மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார். குழந்தைகளைப் பிரசவித்த பின்னரான 32 நாட்களில், அவர் இரண்டு […]

உலகம்

டொனால்ட் ட்ரம்பின் கடவுச்சீட்டுக் கொள்கைக்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

  • November 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பாலின அடிப்படையிலான புதிய கடவுச்சீட்டுக் கொள்கை நடைமுறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கக் கடவுச்சீட்டில் ஆண் (M) அல்லது பெண் (F) ஆகிய இரு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் புதிய கடவுச்சீட்டுக் கொள்கை அமையவுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனுமதி இல்லை என அமெரிக்க உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாம் நிலை பாலினத்தவர்களின் உரிமைகள் குறித்து ஒரு புதிய சர்ச்சை நிலை எழுந்துள்ளது. முன்னதாக, அமெரிக்கக் கடவுச்சீட்டில் ஆண், […]

கருத்து & பகுப்பாய்வு

சூரியனுக்குள் அழிந்து போகவுள்ள பூமி – விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

  • November 8, 2025
  • 0 Comments

பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு ஏற்பச் சூரியனும் ஒரு நாள் அழிந்து போகும் எனச் சூப்பர் கணினி கட்டமைப்பு மூலம் நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியன் அழிந்து போகும் என நாசா தெரிவித்துள்ளது. அதன் பின்னர் சூரியனில் எரிபொருள் தீர்ந்து, அது வீங்கிப் பெரிதாகி, சிவப்புப் பூதம் (Red Giant) என்ற புதிய வடிவம் எடுக்கும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சூரியனுக்கு ஏற்படும் இந்தப் பாதிப்பு, பூமிக்கு முன்னதாகவே ஆபத்தை ஏற்படுத்தும் என […]

ஐரோப்பா

சீனாவுக்கு முன் இத்தாலியில் பரவிய கோவிட்-19 வைரஸ் – தடயங்கள் கண்டுபிடிப்பு

  • November 8, 2025
  • 0 Comments

சீனாவுக்கு முன்னதாகவே இத்தாலியில் கோவிட் வைரஸ் பரவியதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டில் கோவிட் வைரஸ் உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், பல லட்சம் பேர் உயிரிழந்தனர். இதுவரை, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் வைரஸ் காரணமாகவே இந்தத் தாக்கம் ஏற்பட்டதாகக் கருதப்பட்டு வந்தது. எனினும், 2019ஆம் ஆண்டிலேயே இத்தாலியில் கோவிட் வைரஸ் பரவியமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் தேசிய சுகாதார நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வில், வடக்கு பகுதியிலுள்ள […]

உலகம்

அமெரிக்க இராணுவத் தளத்திற்கு வந்த மர்மப் பொதியைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி (Update)

  • November 8, 2025
  • 0 Comments

அமெரிக்க இராணுவத் தளமான மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் படைத் தளத்திற்கு (Joint Base Andrews) வந்த மர்மப் பொதி காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பொதியில் இருந்த அடையாளம் தெரியாத வெள்ளைப் பொடி காரணமாகவே பல வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஏழு பேர் நோய்வாய்ப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து தளத்திலிருந்த இரண்டு கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தலைநகர் […]

உலகம் செய்தி

கழுவத் தேவையில்லை, மாவுச்சத்து நீக்கம் – ஜப்பானில் விற்கப்படும் உலகின் விலை உயர்ந்த அரிசி!

  • November 8, 2025
  • 0 Comments

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் கின்மிமாய் பிரீமியம் (Kinmemai Premium) எனப்படும் அரிசி, உலகிலேயே விலை உயர்ந்த அரிசி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த அரிசியின் 840 கிராம் விலை சுமார் 10,800 யென் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கின்மிமாய் பிரீமியம் அரிசி உலகிலேயே மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்கப்படுவதாக இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சமைப்பதற்கு முன் மற்ற அரிசிகளைப் போல இதை கழுவ வேண்டியதில்லை என்பதே இதன் தனிச்சிறப்பு என தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த அரிசி […]

செய்தி

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரிகள் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

  • November 8, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் மகளிர் அணியின் முன்னாள் தலைவி முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலரும், தற்போது பதவியில் இருப்பவர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று முன்னாள் தலைவி ஜஹானாரா ஆலம் குற்றம் சுமத்தியிருந்தார். 2022ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது, மகளிர் அணியின் முன்னாள் தேர்வாளர் ஒருவர் தன்னை தகாத முறையில் […]

உலகம்

காலநிலை நெருக்கடி! விளைவுகள் உறுதி – வெப்பநிலை உச்சம் தொடும் என எச்சரிக்கை

  • November 8, 2025
  • 0 Comments

உலகம் வெப்பமடைவதை 1.5 பாகை செல்சியஸால் மட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) உலக நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். பிரேஸிலின் பெலெம் நகரில் ‘COP-மாநாடு’ என்ற காலநிலை மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக செயலாளர் நாயகம் கருத்து வெளியிட்டார். 2030ஆம் ஆண்டளவில் 1.5 பாகை செல்சியஸ் என்ற மட்டத்தைத் தாண்டி உலகம் வெப்பமடையலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். “இதன்மூலம், மாற்ற முடியாத விளைவுகளுடன் உலகின் வெப்பநிலை தீவிரமாக அதிகரிக்கலாம். உலக வெப்பமயமாதலைக் […]

இலங்கை செய்தி

இலங்கை மருத்துவ துறையில் புரட்சி – நீரிழிவு கண்காணிப்புக்காக புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

  • November 8, 2025
  • 0 Comments

இலங்கையில் முதற்தடவையாக, தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) திட்டமொன்றை ட்ராபெஸ் பார்மா ஹோல்டிங்ஸ் (Trapez Pharma Holdings) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை நவீனமயமாக்கும் முயற்சியின் ஓர் அங்கம் இதுவாகும். இதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்ட “Ainuo O” என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. “தொழில்நுட்பத்தின் வாயிலாக நீரிழிவு பராமரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் சமீபத்தில் கொழும்பில் இடம்பெற்ற மருத்துவ மாநாட்டில், குறித்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ், கைகளில் குத்தி இரத்தத் […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் நெதன்யாகுவுக்கு எதிராக இனப்படுகொலை கைது வாரண்டை பிறப்பித்த துருக்கி

  • November 7, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு எதிராக இனப்படுகொலைக்கான கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 37 சந்தேக நபர்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்(Israel Katz), தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமர் பென் க்விர்(Itamar Ben Gvir) மற்றும் இராணுவத் தலைவர் இயல் ஜமீர்(Eyal Zamir) ஆகியோர் அடங்குவர். காசாவில் இஸ்ரேல் செய்தது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் […]

error: Content is protected !!