உலகம்

சீனாவில் ஊழியர்களுக்குப் பரிசாகத் தங்கம் வழங்கும் பிரபல நிறுவனம்

  • November 10, 2025
  • 0 Comments

சீனாவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று, தனது பணியாளர்களுக்குத் தங்கத்திலான கணினி உபகரணம் ஒன்றை வழங்கி பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமது நிறுவனத்தில் சிறந்து விளங்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், தங்க விசைமூடிகளை (Gold Keycaps) Insta360 என்ற தொழில்நுட்ப நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த நான்கு வருடங்களாகப் போனஸ் என்ற அடிப்படையில் மிகவும் பெறுமதியான பொருட்களை வழங்கி ஊழியர்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில், இம்முறை கணினியின் விசைப்பலகையில் (Keyboard) பொருத்தக்கூடிய தங்க விசைமூடிகளைப் […]

இலங்கை

தாவூத் இப்ராஹிம் குழுவுடன் விடுதலைப் புலிகள் தொடர்பு? – அமைச்சர் விளக்கம்

  • November 10, 2025
  • 0 Comments

தாவூத் இப்ராஹிம் குழுவுடன் விடுதலைப் புலிகளின் எச்சங்களாக உள்ள சிலர் இணைந்து செயற்படுகின்றனர் என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து பதிலளிக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள குழு நடவடிக்கையில் ஈடுபடும் தாவூத் இப்ராஹிம் குழுவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் நேற்று இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு […]

கருத்து & பகுப்பாய்வு

மனித மூளைக்குள் சிறிய சிப்! மருத்துவத் துறையை பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு

  • November 10, 2025
  • 0 Comments

உலகில் மிகவும் சிறிய அளவைக் கொண்ட MOTE என்ற நுண்ணிய கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் மனிதர்களின் நரம்பியல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையே மாற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரிசிப் பருக்கையின் அளவைக் கொண்ட இந்தச் சிப், அதிநவீன மூளை உட்பொருத்தும் கருவி ஆகும். சுமார் 300 மைக்ரான் நீளம் கொண்ட இந்தச் சிப், உலகின் மிகச்சிறிய வயர்லெஸ் நரம்பியல் இம்ப்லாண்ட் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சிப், மூளையின் மின் செயல்பாடுகளை அளந்து, அந்தச் சமிக்ஞைகளை […]

ஐரோப்பா

பாரபட்சக் குற்றச்சாட்டுகள் – BBC நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் பதவி விலகல்

  • November 10, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட BBC செய்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைமை அதிகாரி ஆகிய இருவரும் பதவி விலகியுள்ளனர். தங்கள் செய்தி வெளியீட்டில் பாரபட்சம் காட்டுவதாகத் தொடர்ந்து வந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர். BBCயின் நடுநிலைமை குறித்து எழுந்த விமர்சனங்களே இந்த நிர்வாக மாற்றங்களுக்கு முக்கியக் காரணம் ஆகும் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021 ஆம் ஆண்டில் பேசியதன் இரண்டு வேறுபட்ட பகுதிகளை ஒன்றாகத் […]

உலகம்

நியூசிலாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ – கட்டுப்படுத்த திணறும் பணியாளர்கள்

  • November 10, 2025
  • 0 Comments

நியூசிலாந்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, புகழ்பெற்ற தோங்காரீரொ தேசியப் பூங்கா (Tongariro National Park) சேதமடைந்துள்ளது. பூங்காவின் சுமார் 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கட்டுக்கடங்காத தீயினால் எரித்து நாசமாக்கியுள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். பூங்காவின் அமைவிடம் மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான பகுதி என்பதால், தீயணைப்பு வீரர்கள் அந்தப் பகுதியை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் (ஹெலிகொப்டர்கள்) மூலம் தண்ணீரைப் பாய்ச்சி, கட்டுக்கடங்காத தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், தீ வேகமாகப் பரவி […]

இலங்கை

இலங்கையில் கிரிக்கெட் போட்டியின்போது சோகம் – பந்தை பிடிக்க முயன்ற வீரர் பலி

  • November 10, 2025
  • 0 Comments

மினுவாங்கொடை, அலுதபொல பொது மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் பலுகஹவெல, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த தனுஷ்க தேவிந்த பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துக்குப் பிறகு அவர் உடனடியாக மினுவாங்கொடை அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் முடிவுக்கு வந்த நிதி முடக்கம்! செனட் சபை அனுமதி

  • November 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பல நாட்களாக நீடித்து வந்த நிதி முடக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக செனட் சபை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிதி ஒதுக்கீடுக்கான அனுமதியை வழங்க செனட் சபை உறுப்பினர்கள் மறுத்திருந்தனர். இதன் காரணமாக அமெரிக்காவில் பல நாட்களாக நிர்வாக முடக்கம் நீடித்து வந்த நிலையில் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிதி முடக்கத்தால் பல இலட்சக்கணக்கான அமெரிக்கர்கள் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவின் […]

ஐரோப்பா

புட்டினிடம் உருக்கமான கோரிக்கை வைத்த 11 வயதுச் சிறுமி – ரஷ்ய ஜனாதிபதி அளித்த உறுதி!

  • November 10, 2025
  • 0 Comments

ரஷ்யாவில் 11 வயதுச் சிறுமி வைத்த உருக்கமான கோரிக்கை ஒன்றை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடனடியாக ஏற்றுக்கொண்டு, அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். நடைபெற்ற ஒற்றுமை நாள் (Unity Day) நிகழ்ச்சியின் போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மொஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் (Red Square) நடந்த இந்நிகழ்வில், புட்டினைச் சந்தித்த அந்தச் சிறுமி, உக்ரைன் போரில் ஆண்டன் பெஸ்யுரா என்ற தனது உறவினருக்குக் கையில் காயம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சரியான […]

உலகம் செய்தி

ஈரானில் வரலாறு காணாத வறட்சி – தண்ணீர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள்

  • November 10, 2025
  • 0 Comments

ஈரானில் வரலாறு காணாத கடுமையான வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் தண்ணீருக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் தயாராகி வருகிறது. தலைநகர் தெஹ்ரான் இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவே மழையைப் பதிவு செய்துள்ளது. நாட்டின் பாதி மாநிலங்களில், கடந்த சில மாதங்களாக மழையே இல்லாத நிலை என்ற நிலை நீடிக்கிறது. மிக முக்கியமான நீர்த்தேக்கமான அமிர் கபீர் (Amir Kabir) அணையில், இன்னும் […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணி மரணம்! இத்தாலி புறப்பட்ட விமானத்தில் நடந்த சோகம்

  • November 10, 2025
  • 0 Comments

இத்தாலியின் மிலான் (Milan) நகரம் நோக்கிச் சென்ற சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் (Singapore Airlines – SQ378) ஒன்றில் பயணித்த நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த பயணி மருத்துவ அவசரநிலையால் மரணமடைந்ததாக 8 World செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சுமார் 2 மணி நேரத்தில் மருத்துவ அவசரம் ஏற்பட்டதாகவும், விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருந்தால் உதவ வருமாறும் அறிவிப்பு வெளியானதெனவும், விமானத்தில் பயணம் செய்த மருத்துவர் வெய் ஜுன்தாவ் (Dr. […]

error: Content is protected !!