செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடருக்கான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு

  • November 9, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இவ் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை 11ம் திகதி ராவல்பிண்டியில்(Rawalpindi) ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி சரித் அசலன்கா(Charith Asalanka) பதும் நிசங்கா(Pathum Nissanka) […]

இலங்கை செய்தி

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இரண்டு சகோதரிகள் உட்பட மூவர் கைது

  • November 9, 2025
  • 0 Comments

அளுத்கமவிலிருந்து(Aluthgama) பதுளை(Badulla) மற்றும் பண்டாரவளைக்கு(Bandarawela) போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று நபர்கள், ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுடன், விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த 1,000 ஹெராயின் பொதிகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. ஹாலி-எலயில்(Hali-ela) வசிக்கும் 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு சகோதரிகள் பதுளை மற்றும் பண்டாரவளையில் போதைப்பொருட்களை விநியோகித்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது மேலும், இவர்களுடன் இணைந்து போதைப்பொருட்களை பொதி செய்து கொண்டிருந்த இரண்டு சந்தேக […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் ஏற்பட்ட சக்திவாய்ந்த கடல் அலையில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு

  • November 9, 2025
  • 0 Comments

ஸ்பெயினின் பிரபலமான விடுமுறை தீவான டெனெரிஃப்பை(Tenerife) சக்திவாய்ந்த அலைகள் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். புவேர்ட்டோ டி லா குரூஸ்(Puerto de la Cruz) ரிசார்ட் அருகே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதில் ஒரு பெண் மற்றும் சாண்டா குரூஸ் டி டெனெரிஃப்பில்(Santa Cruz de Tenerife) ஒரு ஆண் உயிரிழந்ததாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளது. மேலும், தீவின் வடக்கே உள்ள லா குவாஞ்சாவில்(La Guancha) தண்ணீரில் விழுந்த மூன்றாவது நபர் விமானம் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணம்

  • November 9, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டென்னசி(Tennessee) மாநிலத்தின் நாஷ்வில்லுக்கு(Nashville) கிழக்கே ஒரு மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளார் மற்றும் இரண்டு பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். வாட்டர்பில்ட் லைப்ஃப்ளைட்(Waterbilt LifeFlight) ஹெலிகாப்டர் நாஷ்வில்லுக்கு கிழக்கே லெபனான்(Lebanon) மற்றும் கல்லட்டினுக்கு(Gallatin) இடையில் உள்ள ஒரு வயலில் விபத்துக்குள்ளானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த இரண்டு பணியாளர்களும் நாஷ்வில்லில் உள்ள வாட்டர்பில்ட்(Waterbilt) பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான கண்காணிப்பு வலைத்தளங்களான FlightAware மற்றும் Flightradar24 படி, ஹெலிகாப்டர் அவசரகால […]

உலகம் செய்தி

மலேசியா அருகே மியான்மர் குடியேறிகளின் படகு கவிழ்ந்து விபத்து – 7 பேர் மரணம்(Update)

  • November 9, 2025
  • 0 Comments

தாய்லாந்து-மலேசியா எல்லைக்கு அருகே மியான்மரிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான குடியேறிகளின் படகு இன்று விபத்துக்குள்ளானது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மலேசிய மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மியன்மாரின் புதிடாங்கிலிருந்து (Buthidaung) சுமார் 300 பேருடன் புறப்பட்ட கப்பல் மலேசியாவை நெருங்கியதும் பயணிகள் மூன்று சிறிய படகுகளுக்கு பிரிக்கப்பட்ட பின்னர் அதில் ஒரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை மற்றும் கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த நேரம், சரியான […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்

  • November 9, 2025
  • 0 Comments

27வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக முதல் நாடு தழுவிய போராட்டங்களை பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தத் திருத்தத்தில், கூட்டுப் பணியாளர்கள் குழுவின் (CJCSC) தலைவர் பதவியை நீக்குவதும், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDF) என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்துவதும் அடங்கும். பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசங்களில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பின்னர் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திருத்தத்தில் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தை நிறுவுதல் […]

உலகம் செய்தி

ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மருத்துவர் – மனைவி விடுத்துள்ள கோரிக்கை

  • November 9, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் கே. ஜெகதீஸ்வரன் ரஷ்யாவில் தெளிவற்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு செப்டம்பரில், சோச்சி(Sochi) விமான நிலையத்தில் ஜெகதீஸ்வரன் ரஷ்ய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவரது மனைவி யாமினி, மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு அவரை இந்தியாவுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஜெகதீஸ்வரன் ரஷ்யாவில் அனுபவித்த சோதனையை விவரித்த யாமினி, அவர் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும், அவரது […]

இந்தியா செய்தி

அசாம் நீர்வீழ்ச்சியில் மூழ்கி இறந்த 3 கல்லூரி மாணவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

  • November 9, 2025
  • 0 Comments

அசாமில்(Assam) காணாமல் போன தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்(NIT) மூன்று மாணவர்களின் உடல்கள் திமா ஹசாவோ(Dima Hasao) மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 20 வயதுடைய சர்வ கிருத்திகா மற்றும் சவுஹர்த் ராய், 19 வயதுடைய ராதிகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிருத்திகா மற்றும் ராய் உத்தரபிரதேசத்தைச்(Uttar Pradesh) சேர்ந்தவர்கள் என்றும், ராதிகா பீகாரைச்(Bihar) சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் ஹரங்காஜாவோ(Harangajao) கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக அதிகாரிகள் […]

இந்தியா

இந்தியாவில் 03 கொம்புகளை உடைய டைனோசரின் புதைபடிவம் கண்டுப்பிடிப்பு!

  • November 9, 2025
  • 0 Comments

இந்தியாவில் மூன்று கொம்புகளை கொண்ட டைனோசரின் புதைபடிவம் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள  சஹரன்பூர் மாவட்டத்தின்  நதிக்கரைக்கு அருகில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது, ​​டிரைசெராடாப்ஸ் (Triceratops) எனப்படும் இவ்வகையான டைனோசரின் புதைபடிவம் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த புதைபடிவம் மில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டைனோசர்கள் 100.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரெட்டேசியஸ் (Cretaceous) காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த இயற்கை வரலாறு மற்றும் […]

உலகம் செய்தி

ஈக்வடார் (Ecuador) சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்! பலர் பலி!

  • November 9, 2025
  • 0 Comments

ஈக்வடார் (Ecuador) சிறையில் இரு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சண்டையில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இன்று  அதிகாலையில் மச்சாலாவில் (Machala) உள்ள எல் ஓரோ எண் 1 (El Oro No 1) தடுப்பு மையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததாகவும், பலமணி நேரங்களாக நீடித்த மோதல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். சில கைதிகள் தீவிர காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. […]

error: Content is protected !!