இலங்கை

இலங்கையர்களிடையே அதிகரித்து வரும் நோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

  • November 10, 2025
  • 0 Comments

கண் பார்வையை சிதைக்கும்  கெரடோகோனஸ் (Keratoconus) நோய் இலங்கையர்கள் இடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் மருத்துவமனை எச்சரித்துள்ளது. கார்னியா (Cornea) அறுவை சிகிச்சை நிபுணர் ஆலோசகர் டாக்டர் குசும் ரத்னாயக்க இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காலத்தில் அரிதாகக் கருதப்பட்ட இந்த நிலை இப்போது எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே கூட அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அளவில் இதுவரை எந்த கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்றாலும், பெரும்பாலான நோயாளிகள் 10 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் […]

செய்தி

(update) தலாவ பேருந்து விபத்து தொடர்பில் சாரதி கைது!

  • November 10, 2025
  • 0 Comments

அனுராதபுரம், தலாவையில் இன்று காலை நடந்த விபத்து தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 16 வயதுடைய சாதாரணதர மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 39 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் தலாவ ஹங்குரங்கெத்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவரின் உடல் அனுராதபுரம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா

டெல்லியில் திடீரென வெடித்து சிதறிய கார் – 08 பேர் பலி!

  • November 10, 2025
  • 0 Comments

இந்தியாவின் தலைநகர் டெல்லியில்  உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் இன்று  திடீரென வெடித்து சிதறியதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தீயானது அருகில் இருந்த வாகனங்களுக்கும் பரவி பாரிய சேதத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சம்பவத்தை […]

பொழுதுபோக்கு

ரங்கராஜ் தாக்கல் செய்த மனு திகதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு

  • November 10, 2025
  • 0 Comments

மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, காவல் துறையில் புகார் அளித்ததுடன், சமூக வலைதளங்களில் பேட்டியும் அளித்திருந்தார். இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். […]

ஐரோப்பா

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ( Nicolas Sarkozy) நிபந்தனைகளுடன் விடுதலை!

  • November 10, 2025
  • 0 Comments

லிபியத் தலைவர்  கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றமை தொடர்பில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியை ( Nicolas Sarkozy) நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய பாரிஸ் மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அவர் இன்று (10) சிறையிலிருந்து வெளியேறுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவர், பிரெஞ்சு பிரதேசத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,  நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!

  • November 10, 2025
  • 0 Comments

லண்டனில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆபரேஷன் பேஸ்லைஃப் (Operation Baselife) திட்டத்தின் ஒரு பகுதியாக தலைநகரில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். லெய்செஸ்டர் சதுக்கத்தை  (Leicester Square) சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களிடம் இருந்து தொலைபேசிகள் திருடப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து காவல்துறையினர் சமானியர்கள் போல் ரோந்து […]

இலங்கை

இரட்டை கொலை – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!

  • November 10, 2025
  • 0 Comments

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு அம்பாறை நீதவான் நீதிமன்றம்  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015 ஏப்ரல் 14 ஆம் திகதி பதியதலாவ கெஹெலுல்ல பகுதியில் இரண்டு நபர்கள் அடித்துக் கொல்லப்பட்டு லொறியால் மோதி விபத்து ஏற்பட்டதுபோல் காண்பிக்கப்பட்ட  சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரணை […]

இலங்கை

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சமர்பிப்பு!

  • November 10, 2025
  • 0 Comments

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார். அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனகள், சபைகள், அதிகார சபைகள், நியதிச்சட்ட நிதியங்கள், நியதிச்சட்டமல்லாத நிதியங்கள், வெளிநாட்டு உதவித் திட்டங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களை 2024 ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்து அவற்றின் […]

உலகம் செய்தி

அமெரிக்க விசா கட்டுப்பாடு – பொதுக் கட்டணக் கொள்கையை கடைப்பிடிக்க வலியுறுத்தல்!

  • November 10, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் பொதுக் கட்டணக் கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்க விசா கோரும் வெளிநாட்டினருக்கு, நீரிழிவு அல்லது உடல் பருமன் உள்ளிட்ட சில மருத்துவ நிலைமைகள் இருந்தால் அவர்களின் விசா நிராகரிக்கப்படலாம் என்ற புதிய விதி கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம்  உலகெங்கிலும் உள்ள அனைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. வயது அல்லது பொது சலுகைகளை நம்பியிருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளிட்ட மேலும் […]

இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்ப ஆயிரம் கூட்டங்களை நடத்த திட்டம்!

  • November 10, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்படும் எனவும், ஆயிரம் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ இன்று (10) தமது கடமையை பொறுப்பேற்றார். ஐதேக தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற இதற்குரிய நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிக்கு முழு ஆதரவு […]

error: Content is protected !!