உலகம் செய்தி

அமெரிக்காவின் அதி ரகசிய ஏவுகணையின் படம் முதல்முறையாக வெளியீடு!

  • November 9, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அதி ரகசிய ஏவுகணை ஒன்றின் புகைப்படம் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில்  சோதனை விமானத்தில் இருந்தபோது முதல்முறையாக படம்பிடிக்கப்பட்டதாக தி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது ரஷ்யா மற்றும் வடகொரியாவிற்கு தனது இராணுவ பலத்தை காட்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அக்டோபர் மாத இறுதியில் விமானப் புகைப்படக் கலைஞர் இயன் ரெச்சியோ ( Ian Recchio ) இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்த ஏவுகணை டார்ச்52 (Torch52)  எனப்படும் 488,000 பவுண்டு எடையுள்ள B-52H ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸில் […]

இலங்கை செய்தி

NPP அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – தோட்ட தொழிலாளர்கள்!

  • November 9, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாயாக  உயர்த்த அரசாங்கம்  முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த முடிவை அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர். இதற்காக ஜனாதிபதிக்கு நன்றிக்கூறியுள்ள மக்கள் தோட்ட சமூகங்களின் நீண்டகால கஷ்டங்களை ஒப்புக்கொண்ட ஒரு வரலாற்று மற்றும் இரக்கமுள்ள முடிவு என்று விவரித்தனர். வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், ஒரு அரசாங்கம் போராட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்கள் இல்லாமல் தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் […]

ஐரோப்பா செய்தி

சுவீடன் தலைநருக்கு அருகில் பறந்து சென்ற மர்ம ட்ரோன் – கழிவுகளை கொட்டியதால் பரபரப்பு!

  • November 9, 2025
  • 0 Comments

சுவீடன் தலைநகர்  ஸ்டாக்ஹோமுக்கு (Stockholm) வெளியே உள்ள ஒரு லிடிங்கோ தீவில் (Lidingö island ) மர்ம ட்ரோன் ஒன்று பறந்து சென்று குப்பைகளை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்ய வர்த்தகக் குழுவின் வில்லாவின் மீது குறித்த ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றாலும், ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் நாசவேலை மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் வழக்கு […]

பொழுதுபோக்கு

அந்த படத்தின் ரீமேக் தான் “ஜனநாயகன்“? வெளிவந்த ஆதாரம்

  • November 9, 2025
  • 0 Comments

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் வந்ததில் இருந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது. மேலும் சர்ச்சைகளையும் சில கதைகளையும் உடன் கொண்டு வருகின்றது. அதாவது ஜனநாயகன் ஆரம்பித்தில் இருந்தே தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்கிற பேச்சு இருக்கிறது. பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி தெலுங்கில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய்க்கு பகவந்த் […]

பொழுதுபோக்கு

ஆரோமலே படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

  • November 9, 2025
  • 0 Comments

அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ஆம் திகதி வெளிவந்த படம் ஆரோமலே. பிரபல நடிகர் தியாகுவின் மகனான சாரங் தியாகு கவுதம் மேனனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்து, ஆரோமலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 1.9 கோடி வசூல் செய்துள்ளது.

இலங்கை செய்தி

வருடாந்திர வருவாய் இலக்கை அடுத்த 03 நாட்களில் அடையும் பாதையில் இலங்கை சுங்கத்துறை!

  • November 9, 2025
  • 0 Comments

இலங்கை சுங்கத்துறை, 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர வருவாய் இலக்கை அடுத்த மூன்று நாட்களுக்குள் அடையும் பாதையில் இருப்பதாகக் கூறுகிறது. நவம்பர் 6 ஆம் திகதி, சுங்கத்துறை தனது வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு நாள் வருவாய் 27.7 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்ததாக சுங்க இயக்குநர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், அக்டோபர் 15, 2025 அன்று அதிகபட்சமாக ஒரு நாள் வருவாய் ஈட்டியதாகவும்,  அப்போது சுங்கத்துறை 24.4 பில்லியன் ரூபாயைப் […]

விளையாட்டு

ஐசிசி தரவரிசையில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம்

  • November 9, 2025
  • 0 Comments

ஐசிசி தரவரிசையில் இலங்கை அணியின் முக்கிய வீரர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கை அணியின் தொடக்க வீரர் பெத்தும் நிஸ்ஸங்க, டி20 துடுப்பாட்ட தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, அனுபவ வீரர்களான குசல் ஜனித் பெரேரா 9வது இடத்திலும், குசல் மெண்டிஸ் 18வது இடத்திலும் உள்ளனர். இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க, டி20 பந்துவீச்சுத் தரவரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார 6வது இடத்திலும், சுழல் பந்துவீச்சாளர் […]

செய்தி

டென்மார்க்கின் சில பகுதிகளில் கொவிட்-19 பரவல் – சுகாதார கட்டுப்பாடுகள் தீவிரம்

  • November 9, 2025
  • 0 Comments

டென்மார்க்கின் சில பகுதிகளில் கொவிட் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிங்க் (Mink) பண்ணையில் இருந்து கொவிட்-19 வைரஸ் பரவியதாக சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில், ஏழு நகர சபைகளில் சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய குறித்த நகர சபைகளுக்குமிடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பண்ணையிலுள்ள மிங்க் விலங்குகளையும் அழிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. “கிளஸ்டர் 5” எனப்படும் இந்த மாறுபாடு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த […]

உலகம்

படிம எரிபொருள் பயன்பாட்டால் பூமிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! பிரேசில் ஜனாதிபதி எச்சரிக்கை

  • November 9, 2025
  • 0 Comments

படிம எரிபொருள்களின் பயன்பாடு தொடர்பில் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். படிம எரிபொருள்களின் அதிதீவிர பயன்பாட்டை பூமி நீண்ட காலத்துக்குத் தாங்கிக் கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படிம எரிபொருளை நம்பியிருப்பதை நிறுத்த வேண்டும் என ஏற்கனவே உலக நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்த இணக்கப்பாட்டை விரைந்து அமல்படுத்த வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கடந்த 200 ஆண்டுகளாக உலக […]

ஐரோப்பா

ஸ்பெயினில் தீவிரம் அடையும் பருவகால காய்ச்சல் – சிறுவர்கள் அதிகளவில் பாதிப்பு

  • November 9, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் பருவகால காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் காரணமாக அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் விரைவாக பருவகால காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் பதிவான நோயாளிகளின் தரவுகளுக்கு அமைய, ஒரு லட்சம் பேருக்கு 16.7 இலிருந்து 20.3 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியாக அதிகரித்துள்ளது. 1 முதல் 4 வயது […]

error: Content is protected !!