உலகம் முக்கிய செய்திகள்

2050ஆம் ஆண்டில் அதிகரிக்கவுள்ள குளிரூட்டிகளின் பயன்பாடு – ஆபத்து குறித்து ஐ.நா எச்சரிக்கை

  • November 14, 2025
  • 0 Comments

2050 ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் குளிரூட்டிகளின் (AC) தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பூமியின் வெப்பநிலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டியின் தீவிர பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளிரூட்டும் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்ப வாயு (Greenhouse Gas) சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் […]

உலகம்

அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவில் புதிய விசா அறிமுகம் – இலகுவாக சீனா செல்ல வாய்ப்பு

  • November 14, 2025
  • 0 Comments

வெளிநாட்டு நிபுணர்களை ஈர்க்கும் வகையில் கே-விசா (K-Visa) என்ற புதிய திட்டத்தை சீன அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), செமி-கண்டக்டர், ரோபோ தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளை சேர்ந்தவர்களுக்கு இந்த விசா வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவில் H-1B விசா கட்டண உயர்வால் அங்கு செல்ல முடியாதவர்களை தம் பக்கம் ஈர்க்கும் வகையில் சீனா இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. கே-விசாவை பெற வேலைவாய்ப்பு உறுதி கடிதம் இல்லாமல் கூட விண்ணப்பிக்க முடியும் என்பது இதன் […]

உலகம்

இத்தாலியில் டென்னிஸ் போட்டியில் நடந்த துயரம் – இருவர் மைதானத்தில் மரணம்

  • November 14, 2025
  • 0 Comments

இத்தாலியில் நடைபெற்ற ATP டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றின்போது இரு பார்வையாளர்கள் மாரடைப்பால் உயிரிழந்தமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டி சில தினங்களுக்கு டூரின் (Turin) நகரில் நடைபெற்றது. அன்றையதினத்தில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவைல இத்தாலிய டென்னிஸ் சம்மேளனம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 78 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெஞ்சு வலி ஏற்பட்ட போது இருவருக்கும் உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து டென்னிஸ் அரங்கிலிருந்து […]

உலகம்

ஜப்பானில் கரடிகளால் அச்சுறுத்தல் – காவல்துறையினருக்குப் பெரிய துப்பாக்கி பயன்படுத்த அனுமதி

  • November 14, 2025
  • 0 Comments

ஜப்பானின் அக்கித்தா (Akita) மற்றும் இவாத்தே (Iwate) வட்டாரங்களில் கரடித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரடிகளைப் பெரிய துப்பாக்கியால் சுடுவதற்கு காவல்துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கரடிகள் அண்மைக் காலமாக குடியிருப்பு வட்டாரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. வீடுகள், பாடசாலைகள், பேரங்காடிகள் போன்ற இடங்களுக்குள் கரடிகள் நுழைவதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 13 பேர் கரடியால் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கரடிகளைக் கட்டுப்படுத்த முதலில் ஜப்பானியக் […]

உலகம் செய்தி

வேலை தேட செயற்கை உதவும் நுண்ணறிவு – சிங்கப்பூரில் 3,500க்கும் அதிகமானோர் நாட்டம்

  • November 14, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை தேடுவதற்குச் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் இதுவரை 3,500க்கும் அதிகமானோர் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடியுள்ளனர். தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அதற்காக ஒரு தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்க ஊழியர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் தொழிலாளர் இயக்கத்தால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. புதிய கருவியைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்கள் அவர்களின் தயார்நிலையை மதிப்பிடலாம் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், வேலைச்சந்தையில் தேவைப்படும் திறன்களையும் எளிதில் அடையாளம் […]

உலகம் செய்தி

எத்தனை மனைவிகள்? சிரியா ஜனாதிபதியிடம் வினவிய ட்ரம்ப்

  • November 14, 2025
  • 0 Comments

சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவுக்கு (Ahmed al-Sharaa) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாசனைத் திரவம் வழங்கிய போது கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த அச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. அல்-ஷாராவுக்குத் தமது பெயரிலான வாசனைத் திரவத்தை ட்ரம்ப் பரிசாகக் கொடுத்தார். வாசனைத் திரவத்தை அவர் மேல் தெளித்துவிட்ட ட்ரம்ப், “இதுதான் சிறந்த வாசனைத் திரவம். மற்றொன்று உங்கள் மனைவிக்கு. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என நகைச்சுவையாகக் வினவியுள்ளார். அதற்குச் சிரித்துக்கொண்டே […]

உலகம் செய்தி

புதிய பிரதமரை நியமித்த தான்சானியா ஜனாதிபதி

  • November 13, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களைத் தூண்டிய சர்ச்சைக்குரிய தேர்தலைத் தொடர்ந்து, தான்சானிய(Tanzania) ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன்(Samia Suluhu Hassan) முன்னாள் நிதியமைச்சர் எம்விகுலு என்செம்பாவை(Mwigulu Nchemba) பிரதமராக நியமித்துள்ளார். அக்டோபர் 29 நடந்த வாக்கெடுப்பில் ஹாசனின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, பாராளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் என்செம்பா நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின்(John Magufuli) கீழ் முன்னர் பல அமைச்சரவை பதவிகளில் பணியாற்றிய என்செம்பா, அரசாங்கத்தின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதற்கு விடாமுயற்சியுடன் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். […]

உலகம் செய்தி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத மோசமான காலரா தொற்றுநோயை எதிர்கொள்ளும் ஆப்பிரிக்க நாடுகள்

  • November 13, 2025
  • 0 Comments

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆப்பிரிக்கா மிக மோசமான காலரா நோயை சந்தித்து வருகிறது. அங்கோலா(Angola) மற்றும் புருண்டி(Burundi) நாடுகளில் மீண்டும் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக ஆப்பிரிக்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான பொது சுகாதார நிறுவனமான ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), 2025ம் ஆண்டில் இதுவரை சுமார் 300,000 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் காலரா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. “நாட்டில் காலரா இன்னும் ஒரு முக்கிய […]

இந்தியா செய்தி

ஏர் இந்தியா நிறுவனத்தின் டொராண்டோ-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • November 13, 2025
  • 0 Comments

டொராண்டோவிலிருந்து(Toronto) டெல்லிக்குச்(Delhi) சென்ற ஏர் இந்தியா(Air India) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் தேசிய தலைநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. AI188 விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்ததற்கு பிறகு டெல்லி காவல்துறை அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டது. “பாதுகாப்பு கருதி, பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிவிட்டதாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மும்பையில் இருந்து வாரணாசிக்கு(Varanasi) பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்(Air India Express) […]

உலகம் செய்தி

கடந்த ஆண்டு உலகளவில் காசநோய் காரணமாக 1.23 மில்லியன் பேர் மரணம்: WHO

  • November 13, 2025
  • 0 Comments

உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட ஒரு அறிக்கையில், காசநோய் (tuberculosis) உலகளவில் தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது, இதனால் 2024ம் ஆண்டில் 1.23 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023ம் ஆண்டை விட மூன்று சதவீதம் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 10.7 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 5.8 மில்லியன் ஆண்கள், 3.7 மில்லியன் பெண்கள் மற்றும் 1.2 மில்லியன் குழந்தைகள் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மல் […]

error: Content is protected !!