பொழுதுபோக்கு

இதயத்தில் அடைப்பு : இயக்குநர் வி. சேகர் காலமானார்

  • November 14, 2025
  • 0 Comments

திரைப்பட இயக்குநர் வி. சேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று மாலை காலமானார். இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். கவர்ச்சியான பாடல்கள், நடிகைகள் ஏதுமின்றி குடும்ப பாங்கான படங்களால் ரசிகர்களைக் கவர்ந்தார். இயக்குநர் வி. சேகரின் மறைவுக்கு ரசிகர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்!

  • November 14, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு  118 பெரும்பான்மை வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர், 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ராதா கிருஷ்ணன், பழனி திகாம்பரன் மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை […]

இலங்கை

ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதற்கு தடை – பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்!

  • November 14, 2025
  • 0 Comments

ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதற்கு தடை விதிக்கப்படவில்லை. விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலான தகவல்களை வெளியிடக்கூடாது என்றே பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் பரப்படும் வதந்திகளை நிராகரிக்கின்றோம்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “அரசாங்கத்தை விரட்யடிப்பதற்குரிய முதலாவது வேட்டு நுகேகொடையில் வைக்கப்படும் என அன்று கூறினார்கள். ஆனால் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை நினைவு […]

இலங்கை

இது கார்த்திகை மாதம்: வீரமறவர்களை நினைவுகூரும் மாதம்! சபையில் சாணக்கியன் புகழாரம்!

  • November 14, 2025
  • 0 Comments

பாலமொன்றை பெறுவதற்காக தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காகவே இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் ஆணை வழங்கிவருகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும், அதற்காக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம். இதனை பெறும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்கள் […]

ஐரோப்பா செய்தி

கிரீன்லாந்தில் சொத்து வாங்க காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு சிக்கல்!

  • November 14, 2025
  • 0 Comments

கிரீன்லாந்தில் வெளிநாட்டினர் சொத்துக்களை வைத்திருக்கும் உரிமையை கட்டுப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட சட்டமூலத்திற்கு 21 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அத்துடன் 06 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி டென்மார்க் அல்லாத குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரீன்லாந்தில் தங்கள் அனைத்து வரிகளையும் செலுத்தியிருந்தால் மட்டுமே சொத்து அல்லது நில பயன்பாட்டு உரிமைகளை வாங்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் கிரீன்லாந்து, […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

  • November 14, 2025
  • 0 Comments

இலங்கையின்  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுய-பரிசோதனை (self-check-in service)  சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் மார்கழி மாதத்தில் மாத்திரம் ஏறக்குறைய 300000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அவர்களின் பயணத்தை மேம்படுத்தும் வகையிலும், தாமதங்களை குறைக்கும் வகையிலும்  சுய பரிசோதனை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனத்தின் ஐடி குழுவால் சாத்தியமான இந்த முயற்சி, கடந்த மாதம் புறப்படும் முனையத்தில் 20 புதிய சுய-பரிசோதனை கியோஸ்க்குகள் (kiosks) நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. […]

ஐரோப்பா

இங்கிலாந்தை தாக்கிய கிளாடியா (Claudia) புயல் – பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

  • November 14, 2025
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் கிளாடியா (Claudia) புயலால்   பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு நேற்று முதல் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் 80 மிமீ வரை மழை பெய்யும் என்றும், வேல்ஸில் உயரமான பகுதிகளில் 100-150 மிமீ வரை மழை பெய்யும் என்றும் வானிலை அலுவலகம் கணித்துள்ளது. சில இடங்களில் 24 மணி நேரத்தில் ஒரு மாதத்திற்கு போதுமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடுமையான […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் விஷ வாயு கசிவு – ஆபத்தான நிலையில் 11 பேர்!

  • November 14, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஆபத்தான விஷ வாயு கசிந்ததால் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓக்லஹோமாவின் (Oklahoma) வெதர்ஃபோர்டில் (Weatherford)  உள்ள கார் நிறுத்துமிடத்தில் லொறியொன்றில் இருந்து  ஆபத்தான நீரற்ற அம்மோனியா வாயு கசிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில்  11 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்  கூறப்படுகிறது. அத்துடன் குறித்த பகுதியில் இருந்து 500-600 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 25,000 பவுண்டுகள் எடையுள்ள இரசாயணத்தை ஏற்றிச் சென்ற லொறியில் ஏற்பட்ட சிறு தவறால் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் மருத்துவர்கள்!

  • November 14, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஊதிய உயர்வு கோரி 05 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்நடவடிக்கையானது மருத்துவ சேவைகளை குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய மருத்துவ சங்கம் (BMA) 26 சதவீத ஊதிய உயர்வை கோருகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் ( Wes Streeting) , மருத்துவர்கள் ஏற்கனவே மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 30 சதவீத அதிகரிப்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை மார்ச் 2023 முதல் மருத்துவர்கள் […]

பொழுதுபோக்கு

‘கும்கி’ படத்திற்கு பச்சைக்கொடி காட்டியது சென்னை உயர்நீதிமன்றம்

  • November 14, 2025
  • 0 Comments

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள உருவாகியுள்ள கும்கி 2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் போட்ட தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பாளர் கோரிக்கை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த தடை உத்தரவை நீக்கியுள்ளது.. இன்று வெளியாக இருந்த கும்கி 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சினிமா ஃபைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கும்கி-2 படத்தை தயாரிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு […]

error: Content is protected !!