இலங்கை

நுகேகொடை கூட்டம்: பந்துலவும் கைவிரிப்பு!

  • November 14, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். “தேசிய மக்கள் சக்தியால் நாட்டை மீட்க முடியும் என நம்புகின்றனர். அரசாங்கம் சிறப்பாக பயணிப்பதற்குரிய சட்டங்களை எமது ஆட்சியில் இயற்றி கொடுத்துள்ளோம். அந்த வழியில் தற்போது பயணிப்பதால் பிரச்சினை இல்லை.” எனவும் அவர் குறிப்பிட்டார். 2028 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியாவிட்டால், அதைவிடவும் சிறப்பான திட்டத்தை முன்வைக்கும் தரப்புக்கு ஆதரவளிக்கக்கூடும். அதை […]

செய்தி

இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல் – பாலஸ்தீன குழந்தைகள் இருவர் பலி

  • November 14, 2025
  • 0 Comments

இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பாலஸ்தீனியக் குழந்தைகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மேற்குக்கரையில் உள்ள ஹெப்ரோன் (Hebron) நகரின் அருகே இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீன மக்கள் தற்காலிகமாகக் குடியேறியுள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகச் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றிவளைப்புகளின்போது நடந்த தாக்குதலிலேயே இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தக் குடியிருப்புகளில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியேறச் செய்வதை நோக்கமாகக் கொண்டே […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

சீனாவில் பிரபலமான இரண்டு செயலிகளுக்கு தடை – ஓரினச்சேர்க்கையாளர்கள் கடும் அதிருப்தி

  • November 14, 2025
  • 0 Comments

சீனாவில் பிரபலமான ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ப்ளூட் (Blued) மற்றும் பின்கா (Finka) என்ற டேட்டிங் செயலிகள் சீனாவில் செயற்படாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகத்தின் (CAC) உத்தரவுக்கு அமைய, குறித்த இரண்டு செயலிகளும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் பிரபலமான ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலிகளில் ப்ளூட் ஒன்றாகும். மில்லியன் கணக்கான பயனர்கள் இந்த செயலியை சீனாவில் பயன்படுத்தி வந்ததாக ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. […]

இலங்கை

துணிச்சலான முடிவு – இலங்கைக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான்!

  • November 14, 2025
  • 0 Comments

இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகிய தரப்புகளுக்கு, பாகிஸ்தானிய செனட் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக இவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், ஒற்றுமை மற்றும் மீள் தன்மைக்கான, இந்த நடவடிக்கையைப் செனட் உறுப்பினர்கள் பாராட்டியுள்ளது. மேலும் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். இலங்கையின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பையும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் […]

உலகம் முக்கிய செய்திகள்

2050ஆம் ஆண்டில் அதிகரிக்கவுள்ள குளிரூட்டிகளின் பயன்பாடு – ஆபத்து குறித்து ஐ.நா எச்சரிக்கை

  • November 14, 2025
  • 0 Comments

2050 ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் குளிரூட்டிகளின் (AC) தேவை மூன்று மடங்காக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பூமியின் வெப்பநிலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக இந்த நெருக்கடி நிலை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டியின் தீவிர பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குளிரூட்டும் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்ப வாயு (Greenhouse Gas) சுமார் இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதன் […]

உலகம்

அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவில் புதிய விசா அறிமுகம் – இலகுவாக சீனா செல்ல வாய்ப்பு

  • November 14, 2025
  • 0 Comments

வெளிநாட்டு நிபுணர்களை ஈர்க்கும் வகையில் கே-விசா (K-Visa) என்ற புதிய திட்டத்தை சீன அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), செமி-கண்டக்டர், ரோபோ தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளை சேர்ந்தவர்களுக்கு இந்த விசா வழங்கப்படவுள்ளது. அமெரிக்காவில் H-1B விசா கட்டண உயர்வால் அங்கு செல்ல முடியாதவர்களை தம் பக்கம் ஈர்க்கும் வகையில் சீனா இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது. கே-விசாவை பெற வேலைவாய்ப்பு உறுதி கடிதம் இல்லாமல் கூட விண்ணப்பிக்க முடியும் என்பது இதன் […]

உலகம்

இத்தாலியில் டென்னிஸ் போட்டியில் நடந்த துயரம் – இருவர் மைதானத்தில் மரணம்

  • November 14, 2025
  • 0 Comments

இத்தாலியில் நடைபெற்ற ATP டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றின்போது இரு பார்வையாளர்கள் மாரடைப்பால் உயிரிழந்தமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டி சில தினங்களுக்கு டூரின் (Turin) நகரில் நடைபெற்றது. அன்றையதினத்தில் இருவேறு சந்தர்ப்பங்களில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவைல இத்தாலிய டென்னிஸ் சம்மேளனம் உறுதி செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் 70 மற்றும் 78 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நெஞ்சு வலி ஏற்பட்ட போது இருவருக்கும் உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து டென்னிஸ் அரங்கிலிருந்து […]

உலகம்

ஜப்பானில் கரடிகளால் அச்சுறுத்தல் – காவல்துறையினருக்குப் பெரிய துப்பாக்கி பயன்படுத்த அனுமதி

  • November 14, 2025
  • 0 Comments

ஜப்பானின் அக்கித்தா (Akita) மற்றும் இவாத்தே (Iwate) வட்டாரங்களில் கரடித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கரடிகளைப் பெரிய துப்பாக்கியால் சுடுவதற்கு காவல்துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கரடிகள் அண்மைக் காலமாக குடியிருப்பு வட்டாரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. வீடுகள், பாடசாலைகள், பேரங்காடிகள் போன்ற இடங்களுக்குள் கரடிகள் நுழைவதாகப் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை 13 பேர் கரடியால் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கரடிகளைக் கட்டுப்படுத்த முதலில் ஜப்பானியக் […]

உலகம் செய்தி

வேலை தேட செயற்கை உதவும் நுண்ணறிவு – சிங்கப்பூரில் 3,500க்கும் அதிகமானோர் நாட்டம்

  • November 14, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலை தேடுவதற்குச் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் இதுவரை 3,500க்கும் அதிகமானோர் செயற்கை நுண்ணறிவின் உதவியை நாடியுள்ளனர். தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அதற்காக ஒரு தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்க ஊழியர்களைத் தயார்ப்படுத்தும் வகையில் தொழிலாளர் இயக்கத்தால் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. புதிய கருவியைப் பயன்படுத்தி வேலை தேடுபவர்கள் அவர்களின் தயார்நிலையை மதிப்பிடலாம் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், வேலைச்சந்தையில் தேவைப்படும் திறன்களையும் எளிதில் அடையாளம் […]

உலகம் செய்தி

எத்தனை மனைவிகள்? சிரியா ஜனாதிபதியிடம் வினவிய ட்ரம்ப்

  • November 14, 2025
  • 0 Comments

சிரியா ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாராவுக்கு (Ahmed al-Sharaa) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வாசனைத் திரவம் வழங்கிய போது கேட்ட கேள்வி இணையத்தில் வைரலாகியுள்ளது. வெள்ளை மாளிகையில் நடந்த அச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது. அல்-ஷாராவுக்குத் தமது பெயரிலான வாசனைத் திரவத்தை ட்ரம்ப் பரிசாகக் கொடுத்தார். வாசனைத் திரவத்தை அவர் மேல் தெளித்துவிட்ட ட்ரம்ப், “இதுதான் சிறந்த வாசனைத் திரவம். மற்றொன்று உங்கள் மனைவிக்கு. உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” என நகைச்சுவையாகக் வினவியுள்ளார். அதற்குச் சிரித்துக்கொண்டே […]

error: Content is protected !!