உலகம் செய்தி

அழுத்தங்களுக்கு பணிந்து போரில் பங்கேற்கோம்: பிரிட்டன் திட்டவட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போரில் பிரிட்டன் இணைய வேண்டும் என்ற அழுத்தங்களுக்கு தாம் அடிபணியப்போவதில்லை என பிரதமர் Keir Starmer திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் எந்நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள பின்னணியிலேயே பிரிட்டன் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். போரில் இணைவது தங்களது தேசிய நலனுக்கு எதிரானது என்றும் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் Keir Starmer குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுத் தலைவர்களின் கருத்துக்கள் அல்லது அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிந்து நாட்டின் வெளியுறவுக் கொள்கையை […]

இலங்கை செய்தி

தையிட்டியில் அடுத்தது என்ன? யாழில் விசேட கூட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை மீட்டெடுப்பதற்கான எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. “தையிட்டியில் அடுத்தது என்ன?” எனும் தலைப்பில் ‘தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையால் நிலமிழந்த தமிழர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில் இச்சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது. தையிட்டி நிலங்களை அளவீடு செய்து விடுவிப்பதாக அமைச்சர் இ.சந்திரசேகர் அண்மையில் அறிவித்திருந்த போதிலும், அங்கு சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் நிலைப்பாடு குறித்துத் தெளிவான அறிவிப்புகள் எதுவும் […]

விளையாட்டு

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் சமரி அதபத்து!

  • April 15, 2026
  • 0 Comments

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார். தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட அத்தபத்து, உலகளாவிய ஆலோசனைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமை அடைவதாகக் கூறியுள்ளார். ‘உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. இது எனக்கு தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, இலங்கைக்கும் ஆசிய கிரிக்கெட் சமூகத்திற்கும் ஒரு பெருமைக்குரிய தருணம்’ என […]

இலங்கை செய்தி

அமெரிக்கச் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தினால் விசா இரத்து

  • April 15, 2026
  • 0 Comments

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வருகை தந்து, அந்த நாட்டு குடிமக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்கக் குடிமக்களின் வரிப்பணத்திலிருந்து நிதியளிக்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது அவற்றைச் சார்ந்திருக்கும் நபர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விசா (Non-immigrant visa) வைத்திருப்பவர்களின் விசாக்கள் உடனடியாக இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசா இரத்து செய்யப்படுவதுடன், அத்தகைய நபர்கள் எதிர்காலத்தில் அமெரிக்க […]

ஐரோப்பா

வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரித்தானியா!

  • April 15, 2026
  • 0 Comments

வரலாற்றில் மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரித்தானியா கையெழுத்திட்டுள்ளது. ரஷ்ய படைகளை பின்னுக்கு தள்ளும் வகையில் ஆளில்லா ட்ரோன்களை உக்ரைனுக்கு வழங்கும் நோக்குடன்  புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒப்பந்தத்தின்படி தரைவழி கண்காணிப்பு, கடல்வழித் தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கானவை உட்பட,  120,000 ஆளில்லா விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்படும். இந்த புதிய ஒப்பந்தம் இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடுமையான முன்னணிப் போர்களில் ரஷ்யா ஒரு நாளைக்குக் குறைந்தது 1,000 […]

உலகம் செய்தி

ஈரான் ஒருபோதும் அடிபணியாது!

  • April 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எவ்விதமான அச்சுறுத்தல்களுக்கும் ஈரானிய மக்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள் என அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் Masoud Pezeshkian திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமது நாடு ஏனைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுகளை நடத்தவே விரும்புகிறது எனவும், போரை ஈரான் வலிந்து விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ள நிலையிலேயே, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

எச்சரிக்கை பதிவு! மக்களின் கவனத்திற்கு!

  • April 15, 2026
  • 0 Comments

சுகாதார மற்றும் மருத்துவத் தகவல்களுக்காக செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களை பயன்படுத்துவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவை தவறான அல்லது திசைதிருப்பும் பதில்களை வழங்கும் போக்கைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமீபத்திய ஆய்வு ஒன்றில், ChatGPT மற்றும் Grok உள்ளிட்ட மென்பொருட்களின் உரையாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை 50 மருத்துவக் கேள்விகளுக்கு அளித்த பதில்களில் பாதி “சிக்கலானவை” எனக் கண்டறியப்பட்டது. Grok உரையாடல் மென்பொருட்களில் 58 சதவீத பதில்கள் சிக்கலானவையாக இருந்தன, இதுவே அதிகபட்சப் பிரச்சினைகளாக வெளிப்பட்டது. இதைத் […]

உலகம் செய்தி

ஈரானின் யூரேனியம் செறிவூட்டலுக்கு ரஷ்யா ஆதரவு!

  • April 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே காரணம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் Sergey Lavrov குற்றஞ்சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமரச பேச்சுகள் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை என்ற சர்வதேச அணுசக்தி முகமையின் நிலைப்பாட்டையும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான எந்தவொரு சுமுகமான தீர்வையும் ரஷ்யா […]

இலங்கை செய்தி

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு!

  • April 15, 2026
  • 0 Comments

தற்போதைய நிலைமைகளில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (15) நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் […]

உலகம் செய்தி

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு பயணம்!

  • April 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசமுறை பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஏபர்ல் 15 முதல் 18 வரையில் 4 நாள் பயணமாகவே அவர் மேற்படி நாடுகளுக்கு செல்கின்றார். துருக்கியில் நடைபெறும் அந்தல்யா இராஜதந்திர மன்ற நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளார். ஏனைய நாடுகளிலும் விசேட சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான […]

error: Content is protected !!