இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கனடா குற்றச்சாட்டு
காஸா மக்களுக்கு வான்வழியாக உதவிப் பொருள்களைக் கனடா வழங்கியுள்ளது. அதுகுறித்த தகவலைக் கனடிய அரசாங்கம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) வெளியிட்டது. கிட்டத்தட்ட 22 மாதங்களாகக் காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அனைத்துலக விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கனடா தெரிவித்தது. காஸாவிவுக்கு முதன்முறையாக ஏறத்தாழ 10 டன் உதவிப் பொருள்களை வான்வழியாகக் கனடா வழங்கியது. கனடாவின் ஆயுதப்படை அதனை மேற்கொண்டது. கனடாவையும் சேர்த்து ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், எகிப்து, ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் உதவிப்பொருள்களை வழங்கின. கடந்த […]













