உத்தராகண்ட்: மேகவெடிப்பால் உருவான வெள்ளத்தில் சிக்கி நால்வர் பலி – 50 பேர் மாயம்
மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் காரணமாக, உத்தராகண்ட் மாநிலத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உத்தராசி மாவட்டத்தில் திடீர்வெள்ளத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர் மேலும் வெள்ளத்தில் சிக்கியதாக நம்பப்படும் 50க்கும் மேற்பட்டோரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை.அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக மாநில நிர்வாகம் கூறியுள்ளது. வட மாநிலங்களில் கடந்த இரு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். நிலச்சரிவு காரணமாக […]













