இலங்கை

இராணுவப் பயிற்சியின்போது வெடித்த கைக்குண்டு – மூவர் வைத்தியசாலையில் அனுமதி

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்ததில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூவரும் பொலன்னறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் இராணுவ வீரர்களின் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் இந்த நாட்களில் நடைபெறும் இராணுவப் பயிற்சியின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்