சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை 3வது முறையாக வென்ற கில்

ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது.
அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ஷுப்மன் கில், நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்நிலையில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஷுப்மன் கில், பெண்கள் பிரிவில் அலானா கிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த ஐசிசி விருது 3ஆவது முறையாக ஷுப்மன் கில் பெறுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத்தில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷுப்மன் கில் 101.50 சரசாரியுடன் 406 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு 87 ரன்கள், 60 ரன்கள் மற்றும் 112 ரன்கள் முறையே எடுத்தார்.
இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ஷுப்மன் கில் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.