இலங்கை

கற்பிட்டி- குவேனியின் குடத்தை தேடியோருக்கு நால்வருக்கு விளக்கமறியல்

கற்பிட்டி – நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் நீதிவான் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஞாயிற்றுக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தின் காவலாளி உட்பட புதையல் தோண்டுவதற்கு உதவிய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம். இக்பால்க்கு சொந்தமான 25 ஏக்கர் தோட்டத்தில் புதையல் தோண்டப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸில் அளித்துள்ள முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின்போதே சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

புதையல் தோண்டப்பட்ட தோட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் காவலாளியாக கடமை புரிந்து வரும் சந்தேக நபர், அந்த தோட்டத்தில் குவேனி பாவித்ததாகக் கூறப்படும் செம்பு வகையைச் சேர்ந்த குடம் ஒன்று புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தேடியே தோட்டத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் ம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்