அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி!!! பிரித்தானியா சாதனை!

வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக செயற்கை நுண்றிவால் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியொன்று  உருவாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தலைமையில் இயங்கும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி இதுவாகும்.

“இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸ்கள் மற்றும் எபோலா  போன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி வருகின்றன.

ஆகவே புதிய உருமாறும் திரிபுகளுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தலைமை ஆய்வாளர் ஜொனாதன் ஹீனி (Jonathan Heeney), “தடுப்பூசி உருவாக்கத்தை, அது நிகழ்ந்த பிறகு செயல்படுவதிலிருந்து, எதிர்காலத்திற்கு உகந்ததாக மாற்றுவதற்கு நாங்கள் வழிவகுத்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை மட்டுமே வழங்கும் பாரம்பரிய தடுப்பூசிகளின் சிக்கலை நாங்கள் கடந்துவிட்டோம் எனவும் இந்த புதிய வகை தடுப்பூசி இதுவரை தோன்றாத வைரஸ்களுக்கு எதிராகவும் பாதுகாக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!