இலங்கை செய்தி

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் நடைபெற்ற தீப்பந்த போராட்ட பேரணி

மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று யாழில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் இன்று இரவு இப் போராட்டம் நடைபெற்றது.

யாழ் நல்லூர் பகுதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.

இப் போராட்டத்தில் கட்சியின் அமைப்பாளர்கள், கட்சிப் பிரதிநிதிகள் ஆணரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் மின்சார அதிகரிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இப் போராட்டத்தின் தொடராக யாழிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை