செய்தி விளையாட்டு

FIFA WORLD CUP: மெஸ்ஸி தலைமையில் Argentina அணி அறிவிப்பு!

2026 ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண தொடரை முன்னிட்டு, நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைமைப்பதவி மெஸ்ஸியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை உலக்கிண்ண தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.மொத்தம் 48 அணிகள் களம் காண்கின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 26 வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

குரூப்-ஜே பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா அணி, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் உள்ளிட்ட அணிகளுடன் குரூப் சுற்றில் விளையாடுகிறது.

கடந்த 2022-ல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.

ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனல்டி ஷ_ட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 4-2 என அர்ஜெண்டினா வெற்றி பெற்றது.

இந்த முறை சாம்பியன் படத்தை தக்கவைக்கும் முனைப்பில் அர்ஜெண்டினா களம் காண்கிறது.

38 வயதான அந்த அணியின் தலைவர் மெஸ்ஸிக்கு இது ஆறாவது உலகக் கோப்பை தொடராக அமைந்துள்ளது.

அர்ஜெண்டினா அணி விவரம்

Goalkeepers

Emiliano Martínez
Gerónimo Rulli
Juan Musso

Defenders

Leonardo Balerdi
Nicolás Tagliafico
Gonzalo Montiel
Lisandro Martínez
Cristian Romero
Nicolás Otamendi
Facundo Medina
Nahuel Molina

Midfielders

Leandro Paredes
Rodrigo De Paul
Valentín Barco
Giovani Lo Celso
Exequiel Palacios
Enzo Fernández
Alexis Mac Allister

Forwards

Julián Alvarez
Lionel Messi
Nicolás González
Thiago Almada
Giuliano Simeone
Nico Paz
José Manuel López
Lautaro Martínez

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!