செய்தி விளையாட்டு

ENGvsIND – முதல் இன்னிங்சில் 387 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவும் இடம் பிடித்தனர்.

நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார்.

இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

இந்திய அணியில் சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி