ஐரோப்பா

உலகளாவிய ரீதியில் வீழ்ச்சியடையும் எரிசக்தி விலை : பிரித்தானிய மக்களுக்கு கூறப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

உலகளாவிய மொத்த எரிசக்தி விலைகள் வீழ்ச்சியடைவதால், ஜூலை மாதம் முதல் வழக்கமான வீட்டு எரிசக்தி கட்டணம் ஆண்டுக்கு 400 பவுண்டுகள் ($495) குறையும் என்று பிரிட்டனின் எரிசக்தி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 மாதங்களில் கடுமையாக உயர்ந்த மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்களைச் சமாளிக்க போராடிய மில்லியன் கணக்கான மக்களுக்கு இது மகிழச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

எரிவாயு மற்றும் மின்சார சந்தைகளின் அலுவலகம்,  அதன் விலை வரம்பைக் குறைப்பதாகக் கூறியுள்ளது. இதனால் எரிவாயு சப்ளையர்கள் ஒரு யூனிட் ஆற்றலுக்கு வீடுகளுக்கு வசூலிக்கக்கூடிய அதிகபட்ச தொகை  ஜூலை 1 முதல் ஆண்டுக்கு 2,074 பவுண்டுகளாக ($2,567) இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு, குறிப்பாக  உணவு விலைகள் மிக வேகமாக உயர்ந்து வருவதால், குறைந்த வருமானத்தில் உள்ள பலர் இன்னும் நீடித்த வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்