இந்தியா விளையாட்டு

ஓய்வு குறித்து தொகுப்பாளருக்கு பதிலளித்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி. இவர் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால், தனது ஓய்வு குறித்து டோனி இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

நாணய சுழற்சியின் போது தொகுப்பாளர் டேனி மோரிசன், இது உங்கள் கடைசி ஐபிஎல்,மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறீர்களா? என டோனியிடம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த டோனி, இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்,ஆனால், நான் முடிவு செய்யவில்லை என தெரிவித்தார்.

உடனடியாக டேனி மோரிசன் டோனியைப் பார்த்து, நீங்கள் அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்பீர்கள் எனக்கு தெரியும் என்றார்.

அதன்பின் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி பேசிய டேனி மோரிசன், டோனி மீண்டும் வருவார்.. டோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க வருவார் என கூறினார்.

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே