ஐரோப்பா

ஐரோப்பா உட்பட உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – 80 சதவீதம் உயர்வு

ஐரோப்பா உட்பட உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, தொற்றின் எண்ணிக்கை 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை உலகளவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது என்றும், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும், இறப்பு எண்ணிக்கை 57 சதவீதம் குறைந்து 2,500 ஆக உள்ளது.

இது புதிய வகை கொரோனா தொற்று EG.5 அல்லது “Eris” என அழைக்கப்படும் இந்த மாறுபாடு, XBB.1.9.2 எனப்படும் Omicron துணை வகையுடன் தொடர்புடையது. இந்த புதிய வகை கொரோனா தான் உலகம் முழுவதும் பரவி வருகிறதாம்.

WHO தகவலின்படி, இந்த கொரோனா தொற்றின் அதிக பாதிப்பு கொரியா, பிரேசில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன. பிரேசில், கொரியா, ரஷ்யா, பெரு மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்