இந்தியா

விஜய் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவானோர் கூடியதாக புதுச்சேரி தவெக நிர்வாகி மீது வழக்கு

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகம் பேர் கூடியதாக அக்கட்சி நிர்வாகி மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 3 ஆம் திகதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே கூட வேண்டும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தவெக நிர்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன் புகார் அளித்துள்ளார்.

அதில், தட்டான்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாகவும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறியிருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில், தவெக நிர்வாகி புதியவன் மீது கோரிமேடு பொலிஸார்ர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே