ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியா செய்த மாபெரும் தவறு : 10 வருடம் கழித்து அதிருப்தி!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பில் பிரித்தானியா எடுத்த முடிவை தற்போது பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பெரும்பாலான மக்கள்  பிரெக்ஸிட்டை பெரிய ஏமாற்றமாகக் கருதுகின்றனர். அத்துடன் இது பயனற்றது எனவும் விமர்சித்துள்ளனர்.

இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவதற்கான ஆதரவு அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதே,  குடியேற்றம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்களுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் பிரெக்ஸிட்டிற்குப் பிறகு பிரிட்டன் தனது இறையாண்மையையும் உலகளாவிய செல்வாக்கையும் மீண்டும் பெறும் என்ற கூற்றுகள் பெரும்பாலும் நிறைவேறாதவையாகவே பார்க்கப்படுகின்றன.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே நீடிப்பதற்கான மக்கள் ஆதரவு 2016-ஐ விட கணிசமாகக் குறைந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்