இலங்கை

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட விசேட வைத்திய நிபுணர்கள்!

120 விசேட வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்குத் திரும்பாத வைத்திய நிபுணர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2022ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முதல் இந்த வருடத்தின் ஒகஸ்ட் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 363 வைத்தியர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்காகச் சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில், 120 மருத்துவர்கள் மீண்டும் நாடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

நாட்டின் 29 மயக்கவியல் நிபுணர்களில் 12 பேரும் நாடு திரும்பவில்லை.

கறுப்புப் பட்டியலில் உள்ள மருத்துவர்கள் நாடு திரும்ப முடியும் என்ற போதிலும் அவர்கள் சேவையில் ஈடுபடுவதானால், பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்