இந்தியா செய்தி

ஒடிசாவில் 4 வயது பெண் குழந்தையை 40000 ரூபாய்க்கு விற்ற பீகார் தம்பதி

பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது நான்கு வயது மகளை ஒடிசாவின் பிபிலி பகுதியில் குழந்தை இல்லாத தம்பதியருக்கு 40,000 ரூபாய்க்கு விற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீசார் குழந்தையை மீட்டு, சிறுமியின் பெற்றோர், அவளை வாங்கிய தம்பதிகள் மற்றும் இரண்டு இடைத்தரகர்கள் என ஆறு பேரை கைது செய்தனர்.

புவனேஸ்வரில் உள்ள தங்கபானி பகுதியைச் சேர்ந்த சர்தக் மொகந்தி என்பவர் தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பீகார் தம்பதியினர் தங்களது நான்கு வயது மகளை பிபிலி பகுதியில் உள்ள மற்றொரு தம்பதிக்கு விற்றதாக போலீசில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

40,000க்கு சிறுமி விற்கப்பட்டதை தம்பதியினர் இருவரும் ஒப்புக்கொண்டதாக படகடா காவல் நிலைய அதிகாரி த்ருப்தி ரஞ்சன் நாயக் தெரிவித்தார்.

சிறுமியின் பெற்றோர் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி