ஆஸ்திரேலியா செய்தி

ஐ.எஸ். கொடியை இறக்குமதி செய்த ஆஸ்திரேலிய சிறுவன் கைது!

ஐ.எஸ். IS பயங்கரவாத அமைப்பின் கொடியை இறக்குமதி செய்தார் எனக் கூறப்படும் ஆஸ்திரேலியா Australia , மெல்போர்னைச் Melbourne சேர்ந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட தடைசெய்யப்பட்ட மேற்படி கொடியைக் காவல்துறையினர் கைப்பற்றிய பின்னர், அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்படி சிறுவனின் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தபோது, பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையிலான தகவல்கள் அவரிடம் இருந்தது கண்டறியப்பட்டது.

அதன்பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். சிறார் நீதிமன்றத்தில் சிறுவன் முற்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி