ஆஸ்திரேலியா

லெபனானை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா உதவி

லெபனானிலிருந்து தனது குடிமக்களை வெளியேற்ற, ஆஸ்திரேலியா நூற்றுக்கணக்கான விமான இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பெனி வோங் கூறியிருக்கிறார்.

லெபனானில் எஞ்சியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களை வாய்ப்பு இருக்கும்போதே அங்கிருந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

லெபனானைவிட்டு வெளியேற விரும்பும் ஆஸ்திரேலியக் குடிமக்கள், நிரந்திரவாசிகள், அவர்களின் குடும்பத்தார் ஆகியோருக்கு அக்டோபர் 3, 5ஆம் திகதிகளில் புறப்படும் விமானங்களில் 580 இருக்கைகளை ஒதுக்கப்படுவதாக வோங் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினர். வாரத் தொடக்கத்திலும் விமானச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

லெபனானைவிட்டு வெளியேற விரும்புவதாக கிட்டத்தட்ட 1,700 ஆஸ்திரேலியர்களும் தங்களின் குடும்பத்தாரும் அரசாங்கத்திடம் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.

லெபனானில் ஏறக்குறைய 15,000 ஆஸ்திரேலியர்கள் வசிப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு கூறியது.

“அங்குள்ள நிலைமை மோசமடைவது குறித்து நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம். பெய்ரூட் விமான நிலையம் மூடப்பட்டால், அங்கிருந்து வெளியேறுவதற்கான சாத்தியம் மேலும் குறைந்துவிடும்,” என்றார் வோங்.

லெபனானில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கும் சண்டைநிறுத்தத் திட்டத்துக்கான தமது ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இஸ்ரேல் அந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித