இலங்கை

அதுருகிரிய -பூனையால் இரு குடும்பங்களுக்கு இடையே வெடித்த மோதல்!

அத்துரிகிரிய பிரதேசத்தில் அயல் வீட்டில் இருந்த லொறியில் செல்லப்பிராணியான பூனை சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

லொறியொன்றில் வாள்களுடன் வந்த குழுவினர் வீடொன்றிற்கு சேதம் விளைவித்துள்ளதுடன் அயல் வீட்டில் இருந்த நபரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு 8 மணியளவில் அதுருகிரிய – பக்மீகஹா வீதிப் பகுதியில் இவ்விரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.

அயல் வீட்டுச் சிறு பிள்ளையொன்று செல்லப்பிராணியான பூனையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அப்போது அந்த பூனை அவர்களின் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.மேலும், தனது செல்ல பிராணியான பூனை உயிரிழந்தமை தொடர்பில் அவர்களை திட்டியதாகவும், அதன் பிறகு சம்பந்தப்பட்ட குழுவினர் வந்து தாக்கியதாகவும் வீட்டின் உரிமையாளரான பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் அதுருகிரிய பொலிஸில் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்